Templates by BIGtheme NET
Home » குமரி செய்திகள் (page 10)

குமரி செய்திகள்

Strike-Struggle-Buses-were-routed-in-the-Kumari-district-as

வேலைநிறுத்த போராட்டம்: குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின

நாகர்கோவில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கின. குமரி மாவட்டத்திலும் பல்வேறு தொழிலாளர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். ஆனாலும் நேற்று குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஓடின. கடைகள் திறந்து இருந்தன. வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆட்டோ, வேன், கார் தொழிலாளர்களைத்தவிர பிற ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற வாகனங்களும் ஓடின. தொலைத்தொடர்புத்துறை ஊழியர்கள், ...

Read More »
Police-investigate-a-suicide-police-suicide-at-Marthanda

மார்த்தாண்டத்தில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை

குழித்துறை, மார்த்தாண்டம் பெத்தேல் தெருவில் வசித்து வருபவர் அம்பீதரன் (வயது 60). இவர் களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் அனுசியா (20). இவர், தோவாளையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். அம்பீதரன் தினமும் கடைக்கு செல்லும்போது உதவிக்கு மனைவியையும் அழைத்து செல்வது வழக்கம். அதேபோல் காலையில் அம்பீதரன் கடையை திறப்பதற்காக மனைவியை அழைத்து சென்றார். வீட்டில் அனுசியா மட்டும் தனியாக இருந்தார். இரவு 8 மணிக்கு மனைவியுடன் அம்பீதரன் ...

Read More »
Scandal-in-compliance-with-the-Boating-Bandar-Temple-Action

பூதப்பாண்டி பேரூராட்சியில் முறைகேடு புகார்: செயல் அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம் உதவி இயக்குனர் நடவடிக்கை

பூதப்பாண்டி, குமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் மணி (வயது 58), மாற்றுத்திறனாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மணி நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் அகமது மீரா உம்மாள், மாற்றுத்திறனாளி. இவர் நாகர்கோவிலை அடுத்த பட்டகசாலியன்விளை பகுதியில் வசிக்கிறார். பொதுமக்கள் தங்களது நிலத்தில் புதிதாக வீடு கட்டுவதற்கான வரைபடத்தை அனுமதி வாங்க பேரூராட்சி அலுவலகத்துக்கு வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் தாங்கள் கட்ட இருக்கும் வீட்டின் மதிப்பிற்கு ஏற்ப ...

Read More »
Occupying-homes-in-Araluyuma-The-thrill-of-capturing-the

ஆரல்வாய்மொழியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு

ஆரல்வாய்மொழி, ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் தெற்குமலை ஓடை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 4 வீடுகள் கட்டப்பட்டு இருந்தது. இந்த வீடுகளை இடிக்கும் படி தனியார் ஒரு தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. அதனால், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்தநிலையில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ...

Read More »
A-thousand-rupees-distributed-with-the-Pongal-Gift-in-Kumari

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வினியோகம் தொடங்கியது

ஆரல்வாய்மொழி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாகவும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5–ந் தேதி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் ...

Read More »
1000-kg-ration-rice-was-seized-on-the-beach-to-smuggle

கேரளாவுக்கு கடத்த கடற்கரையில் பதுக்கிய 1000 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்

குளச்சல், குமரி மாவட்டத்தில் இருந்து ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பறக்கும் படை அமைத்து தீவிர சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் குளச்சல் கடலோர பகுதியில் ஒரு வீட்டின் அருகே ரே‌ஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் குளச்சல் கடற்கரை பகுதியில் ...

Read More »