Templates by BIGtheme NET

குமரி செய்திகள்

Family-card

நாகர்கோவிலில் பரபரப்பு ஆற்றங்கரையில் கிடந்த ரேஷன் கார்டுகள் போலீசில் ஒப்படைப்பு

நாகர்கோவில், அக். 17 : நாகர்கோவிலில் ஒழுகினசேரி பழையாற்றின் கரையில் துணி பை ஒன்று கிடந்தது. நேற்று காலை அந்த பகுதிக்கு குளிக்க சென்ற சிலர் அந்த பையில் பார்த்த போது, அதில் 4 ரேஷன் கார்டுகள் இருந்தன. அதில் ஒழுகினசேரி ஆறாட்டு ரோடு பகுதியை சேர்ந்த அய்யப்பன், வடசேரி வெள்ளாளர் மேலத்தெருவை சேர்ந்த நீலகண்டன், அதே பகுதியை சேர்ந்த ரவி, வெள்ளாளர் கீழ தெருவை சேர்ந்த குமாரசாமி ஆகியோரின் வீட்டு முகவரிகள் இருந்தன. 2005 முதல் 2009 வரை பொருட்கள் வாங்கப் பட்டுள்ளது. ...

Read More »
fish-market

வடசேரி மீன் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு சுத்தமாக வைத்திருக்க அறிவுரை

நாகர்கோவில், அக்.17: நாகர்கோவிலில் டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் நகர் நல அதிகாரி டாக்டர் வினோத்ராஜா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆங்காங்கே ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது. டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதை அகற்றுவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், திடீரென வடசேரி மீன் சந்தைக்கு ...

Read More »
dead

தோவாளை செங்கல் சூளையில் இளம்பெண் மர்மச்சாவு

ஆரல்வாய்மொழி, அக்.17: தோவாளை செங்கல் சூளையில் வட மாநில இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் தோவாளை அரசு மேல்நிலை பள்ளி அருகே பெரியகுளம் பாலம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வெளி மாநிலத்தை சேர்ந்த 3 குடும்பத்தினர் தங்கி பணி புரிந்து வருகின்றனர். இதில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா முர்சிதாபாத் பகுதியை சேர்ந்த மெகாபகாரியா (38), இவரது மனைவி அமதீர் பகாரியா (32) ஆகியோர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பணிக்கு வந்ததாக ...

Read More »
nagercoil-anna-stadium

நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் விளையாட்டு பயிற்சிக்கான கட்டணம் உயர்வு நடை பயிற்சிக்கு ரூ.250, ஜிம்முக்கு ரூ.750

நாகர்கோவில், அக்.17 : நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் விளையாட்டுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நடை பயிற்சிக்கு செல்பவர்களும் இனி மாதந்தோறும் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான கட்டணங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. ஒவ்வொரு விளையாட்டுகளுக்கான கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. விளையாட்டுகளுக்கு மட்டுமின்றி காலை, மாலை வேளையில் நடை பயிற்சிக்காக அண்ணா ஸ்டேடியத்துக்கு செல்பவர்களும் இனி மாதந்தோறும் ரூ.250 கட்டணம் செலுத்தி அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் ...

Read More »
SBI-Bank

எஸ்பிஐ வங்கி கிளை மூட எதிர்ப்பு நாகர்கோவிலில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.17: குமரன்குடி பாரத ஸ்டேட் பாங்க் கிளை மூட எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்கள் நலவாரிய சலுகைகள், சில்லறை வியாபாரிகள், சுய உதவிக்குழுக்கள், நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மற்றும் சாதாரண கிராம மக்கள் குறைந்த வட்டியில் நகைக்கடன் ஆகியவைகளுக்கு பயன்படும் வகையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகமான வங்கி கணக்கு தொடங்கப்பட்டு குமரன்குடி எஸ்பிஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இதனை மூடும் ...

Read More »
The-woman-committed-suicide-because-her-husband-denounced

சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியதை கணவன் கண்டித்ததால் பெண் தற்கொலை

பூதப்பாண்டி, பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுபுதூர், அண்ணாநகரை சேர்ந்தவர் சின்னத்துரை. ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (வயது42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயந்தி கடந்த மாதம் கணவனுக்கு தெரியாமல் சுய உதவிக்குழுவில் இருந்து ரூ.25 ஆயிரம் கடன் பெற்றார். இதை அறிந்த சின்னத்துரை, ‘எதற்காக கடன் வாங்கினாய்?’ என மனைவியை கண்டித்தார். இதனால், அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயந்தி மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில், நேற்று அதிகாலையில் சின்னத்துரை வழக்கம் போல் பால்வெட்டும் தொழிலுக்கு சென்று விட்டார். அதன் ...

Read More »