Home » கன்னியாகுமரி செய்திகள் (page 60)

கன்னியாகுமரி செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 77). இவர் கடந்த 2005-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு சேமிப்பு கிட்டங்கி மேலாளராக பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தார். மேலும் ஆரல்வாய்மொழியில் ஒரு புதிய வீடு கட்டி வாடகைக்கு விட்டார். இதுதொடர்பாக கடந்த 18-9-2005 அன்று குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இந்த ...

Read More »

நாகர்கோவிலில் ஒரு வழிப்பாதையில் வந்த 50 ஆட்டோக்களுக்கு அபராதம்

நாகர்கோவிலில் உள்ள ஒரு வழிச்சாலைகளில் தடையை மீறி ஆட்டோக்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் நேற்று மாலை அவ்வை சண்முகம் சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து மீனாட்சிபுரம் நோக்கி ஒரு வழிப்பாதையில் ஏராளமான ஆட்டோக்கள் வந்தன. அந்த ஆட்டோக்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த ஆட்டோக்கள் அனைத்தும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு ...

Read More »

நாகர்கோவில் மேலகலுங்கடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

நாகர்கோவில் மேலகலுங்கடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இத்தகைய நடவடிக்கையில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி குமரி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில் புத்தேரி குளத்தின் கரையில் மேல கலுங்கடி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் கட்டிய வீடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு 3 ...

Read More »

மடங்களையும், திருக்கோவிலையும் பாதுகாக்க முன்வர வேண்டும் சுசீந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனம் பேச்சு

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சுசீந்திரம் கிளை மடத்தில் உள்ள நமச்சிவாய மூர்த்திகள் வணிக வளாகத்தின் மேல் தளத்தில் அம்பலவாணர் அரங்கம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், லட்சுமி ஹோமமும், நவக்கிரக ஹோமமும் நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு சுசீந்திரத்தில் உள்ள கிளை மடத்தில் இருந்து மேல தாளத்துடன் முத்துக்குடை ஏந்தி திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் வருகை ...

Read More »

குத்துவிளக்கு திருடிய 2 பேர் கைது

கருங்கல் அருகே உள்ள மாங்கரை கோட்டவிளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). இவருடைய நண்பர் மாங்கரை முண்டவிளையைச் சேர்ந்த மரிய செல்வின் (42). சம்பவத்தன்று விஜயகுமாரின் வீட்டில் இருந்த 7½ கிலோ எடை உள்ள வெண்கல குத்துவிளக்கு மாயமானது. யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயகுமார் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் தலைமையிலான போலீசார் கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ...

Read More »

நகை பறிக்க முயன்ற பெண் கைது

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது37). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் சாந்தகுமாரி தக்கலை பஸ் நிலையம் அருேக நடந்து சென்று ெகாண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்து கொண்டிருந்த பெண் சாந்தகுமாரியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தகுமாரி கையால் தடுத்தார். உடனே அந்த பெண், சாந்தகுமாரியின் கையில் இருந்த ரூ. 200-யை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து சாந்தகுமாரி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ...

Read More »