Home » கன்னியாகுமரி செய்திகள் (page 5)

கன்னியாகுமரி செய்திகள்

பகவதி அம்மன் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பவனி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 26-ந் தேதி விழா தொடங்கியது. 6-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் ஆன்மீக சொற்பொழிவும், இரவு மெல்லிசைக் கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி ...

Read More »

தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படைஎடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா ...

Read More »

யானையை 50 அடி உயரத்தில் இருந்து ஆபத்தான முறையில் படிக்கட்டு வழியாக இறக்கும் பாகன்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது. புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த ...

Read More »

வடசேரி சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – வியாபாரிகள் போராட்டம்-போலீஸ் குவிப்பு

நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் தங்களது கடைக்கு முன் நடைபாதையில் மேற்கூரை அமைத்து காய்கறிகள் மற்றும் பொருள்களை அதில் வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடைகளுக்கு முன் போடப்பட்டுள்ள மேற்கூரையை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ...

Read More »

கன்னியாகுமரி பகவதி அம்மன் இன்று இரவு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பவனி

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் நவ ராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 26-ந்தேதிதொடங்கியது. 4-ம்திருவிழாவான நேற்று இரவு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி ...

Read More »

சுசீந்திரம் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.32 ஆயிரம் வசூல்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதத்திற்கு ஒருமுைற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதையொட்டி கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் ராமலெட்சுமி, கோவில் கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.32 ஆயிரத்து 15 வசூலாகி உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Read More »