Home » கன்னியாகுமரி செய்திகள் (page 30)

கன்னியாகுமரி செய்திகள்

குளச்சலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆர்ப்பாட்டம்

குஜராத் மாநிலத்தில் கர்ப்பிணி பில்கிஸ்பானுவை கற்பழித்து, அவரது குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதை கண்டித்தும், மீண்டும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும் குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மக்கள் ஜனநாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மேக்காமண்டபத்தில் காருடன் ரேஷன் அரிசி பறிமுதல்;டிரைவர் தப்பி ஓட்டம்

தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கொற்றிக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல் ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநில பதிவெண் கொண்ட சொகுசு காரில் ரேஷன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்த டிரைவரை போலீசார் பார்த்தனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காரில் இருந்த 350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரினை பறிமுதல் செய்த போலீசார் அதனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் ...

Read More »

புனேயில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

புனேயில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரணியல் அருகே வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் ஆகியோர் இரணியல் ரெயில் நிலையம் சென்று ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலின் ஒரு பெட்டியில் 6 பொட்டலங்கள் அனாதையாக கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி பரிசோதனை செய்தபோது கஞ்சா இருந்தது ...

Read More »

கோரிக்கைகளை வலியுறுத்திபி.எம்.எஸ். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்திபி.எம்.எஸ். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம் நடத்தினர். குமரி மாவட்ட பாரதீய மஸ்தூர் (பி.எம்.எஸ்.) அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 3 ஆண்டுகளாக இருந்ததை தன்னிச்சையாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்ததைக் கண்டித்தும், பேச்சுவார்த்தை மரபுகளை மீறி தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக தனி அறையில் அழைத்து பேசியதைக் கண்டித்தும், 28 மாத அரியர் தொகை வழங்காததை கண்டித்தும் என்பன ...

Read More »

திருவள்ளுவர் சிலைக்கு கடுக்காய் பொடி, சுண்ணாம்பு கலவை பூசும்பணி தொடக்கம்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்பட்டு அதன் மெருகு குறையாமல் இருப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. அதன்பிறகு பல்வேறு ...

Read More »

நகைக்கடையில் ஏமாற்றி வாங்கிய வெள்ளி மோதிரத்தை ரூ.300-க்கு விற்று மது குடித்த ஆசாமி

குலசேகரத்தில் ஒரு நகைக் கடையில் ஏமாற்றி வாங்கிய வெள்ளி மோதிரத்தை மற்றொரு கடையில் ரூ.300-க்கு விற்று மது குடித்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் சென்று தனக்கு பச்சை நிற கல் பதித்த வெள்ளி மோதிரம் வேண்டுமென்று கூறினார். கடைக்காரர் விற்பனைக்கு வைத்திருந்த வெள்ளி மோதிரங்களைக் காண்பித்துள்ளார். அதில் பச்சை நிற கல் பதித்த 10 கிராம் எடை கொண்ட மோதிரம் ஒன்றை தேர்ந்தெடுத்த அந்த வாலிபர், பின்னர் அதை ...

Read More »