Home » கன்னியாகுமரி செய்திகள் (page 3)

கன்னியாகுமரி செய்திகள்

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 4 கோடிக்கு விற்பனை இலக்கு

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:- தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள் முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து ...

Read More »

தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி பூ கிலோ ரூ.1250-க்கு விற்பனை

தோவாளை பூ மார்க்கெட்டிற்கு சேலம், ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் தோவாளை, செண்பகராமன்புதூர், பழவூர், ஆவரைகுளம் பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டிருந்த நிலையில் இன்று பிச்சி மல்லிகை, சம்பங்கி பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. ஆயுத பூஜையையொட்டி பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள் இன்று அதிகளவு தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் காலை முதலே பூ மார்க்கெட் ...

Read More »

4-வது முறையாக சாதனை நடைபயணத்தை தொடங்கிய ஏழை வாலிபர்

நாகர்கோயில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி நிஷாந்த்.இவர் கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் லடாக் வரை நடைபயணம் மூலமாக சென்று 3 உலக சாதனை புத்தகம் மற்றும் பல சாதனைகளில் இடம் பிடித்து உள்ளார். இந்த முறை புதியதாக சாதனை படைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடைபயணம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து உள்ளார். அதன்படி அவர் தனது நடைபயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து நேற்று தொடங்கினார். காந்தி வடிவில் வந்த கர்நாடக ...

Read More »

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்ற 23 பேர் மீது வழக்கு

காந்தி ஜெயந்தியொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.இதையடுத்து அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார். கன்னியாகுமரி நாகர்கோவில் தக்கலை குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 23 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆசாரிப்பள்ளம் போலீ ...

Read More »

பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழா

கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் நாளான நாளைமறுநாள் (புதன்கிழமை) பரிவேட்டை திருவிழாநடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கர சாலை வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தைசென்றடைய வேண்டும். இதேபோல் கன்னியாகுமரியில்இருந்து புறப்படும் பஸ்கள் இதே வழியாக நாகர்கோவில் செல்ல வேண்டும். பகவதி அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்றடையும் ...

Read More »

தடம் மாறி இயங்கும் பஸ்களை சரியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இன்று கலெக்டர் அரவிந்த் பொதுமக்களை சந்தித்து மனுக்களை வாங்கினார். கலெக்டர் அலுவல கத்திற்கு மனு அளிக்க வந்த பொது மக்கள் பலத்த சோத னைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தக்கலை ஒன்றிய பா.ஜனதா தலைவர் ஸ்ரீ பத்மநாபன் தலைமையில் ஏராளமானோர் வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- திங்கள்நகர்-தக்கலை செல்லும் குறிப்பிட்ட சில மினிபஸ்கள் அரசு அனுமதி ...

Read More »