Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2220)

கன்னியாகுமரி செய்திகள்

குலசேகரம் மருத்துவ கல்லூரி விடுதி அறையில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை

திருவட்டார், டிச.31– திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின் கரையை அடுத்த உருட்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். காண்டிராக்டர். இவரது மகள் ரேஷ்மா (வயது 18) குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த ரேஷ்மா நேற்று இரவு வெகுநேரமாகியும் சாப்பிட செல்லவில்லை. இதனால் விடுதி வார்டன் ரேஷ்மாவின் அறைக்கு சென்ற போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் விடுதி ஊழியர்கள் மூலம் அறையை உடைத்து திறந்த போது அறையின் ஜன்னலில் நைலான் ...

Read More »

குளச்சல் ஆழ்கடலில் சூறைக்காற்று: படகுகள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

குளச்சல், டிச.31– குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 300–க்கும் மேற்பட்ட படகுகள்,1000–க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இவற்றில் கட்டுமரங்களில் செல்பவர்கள் காலையில் கரை திரும்பி விடுவார்கள். இவர்கள் கொண்டுவரும் மீன்களை வாங்கி செல்ல தினமும் ஏராளமான வியாபாரிகள் கடற்கரை மீன் சந்தையில் கூடுவது வழக்கம். ஆனால் நேற்று மாலை முதலே குளச்சல் கடலில் திடீர் சூறாவளி காற்று வீசியது. அதோடு ஆழ்கடலிலும் பயங்கர காற்று சுழன்றடித்தது. இதனால் படகுகள், கட்டுமரங்களில் செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ...

Read More »

வடசேரி பஸ் நிலையத்தில் என்ஜினீயரிங் மாணவருடன் கல்லூரி மாணவி ‘சில்மிஷம்’ பெண் போலீசார் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

நாகர்கோவில், டிச.31- வடசேரி பஸ் நிலையத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்- கல்லூரி மாணவியை போலீசார் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சில்மிஷம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையங்களில் காலை, மாலை வேளைகளில் காதல் ஜோடிகளின் களியாட்டம் பஸ் நிலையம் வரும் குடும்ப பெண்களை முகம் சுழிக்க வைப்பதாகவும், இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.அதோடு இப்பிரச்சினை காரணமாக மாணவர்கள் மத்தியில் அடிக்கடி இங்கு மோதலும் வாக்குவாதங்களும் ...

Read More »

நாகர்கோவிலில் இருந்து 6 புதிய பஸ்கள் இயக்கம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், டிச.31- நாகர்கோவிலில் இருந்து புதிய பஸ்கள் இயக்கத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். புதிய பஸ்கள் நாகர்கோவிலில் இருந்து திருப்பூர், தஞ்சை, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு செல்ல 3 புதிய பஸ்கள் விடப்பட்டு உள்ளது. இதேபோல கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு 2 புதிய பஸ்களும், திங்கள்நகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஒரு புதிய பஸ்சும் விடப்பட்டு உள்ளது. ஜெயலலிதா புதிய பஸ்கள் இயக்கத்தை முதல்- அமைச்சர் ஜெய லலிதா வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் ...

Read More »

கிராம நிர்வாக அலுவலகம் திறப்பு விழா: அமைச்சர் பச்சைமால் பங்கேற்பு

ஆரல்வாய்மொழி, டிச. 30– ஆரல்வாய்மொழி டவுண் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபுரத்தில் மாவட்ட பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.2.75 லட்சம் செலவில் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மைய கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் பச்சைமால் திறந்து வைத்தார். விழாவில் பாசறை ஒன்றிய செயலாளர் நவமணி தலைமை வகித்தார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் பத்மாவதி, தோவாளை தாசில்தார் சூரிய பிரபா, துயர் துடைப்பு தாசில்தார் ஜோஸ்பின் பெல்சிட்டா வாசுகி, மண்டல துணை வட்டாட்சியர் ...

Read More »

நாகர்கோவிலில் ரசாயனக் கடையில் தீ விபத்து போலீஸ் விசாரணை

நாகர்கோவில், டிச.30- நாகர்கோவிலில் ரசாயனக் கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. புகை வந்தது நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் டதி பள்ளி சந்திப்பையொட்டியுள்ள கட்டிடத்தின் மாடிப்பகுதியில் ரசாயனக் கடை உள்ளது. பள்ளிகளில் அறிவியல் மாணவர்களுக்கு தேவைப்படும் குடுவைகள், ரசாயனங்கள் போன்றவை இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையை அமல்ராஜன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த கடையில் இருந்து குபுகுபுவென புகை வெளிவந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் உடனே நாகர்கோவில் தீயணைப்பு ...

Read More »