Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2210)

கன்னியாகுமரி செய்திகள்

தோவாளை பூ மார்க்கெட்டில் மல்லி–பிச்சி விலை இரு மடங்காக உயர்வு

நாகர்கோவில், ஜன. 13– குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு தோவாளை மற்றும் பல பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை பொங்கல் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளதால் தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லி, பிச்சி பூக்களின் விலை இன்று 2 மடங்காக விலை உயர்ந்து விற்பனையானது. கிலோ ரூ.400–க்கு விற்கப்பட்ட மல்லி ரூ.800–க்கும், கிலோ ரூ.500–க்கு விற்கப்பட்ட பிச்சி பூ ரூ.900–க்கும் விற்பனையானது. செவ்வந்தி ரூ.70, பாக்கெட் ரோஜா 100 பூ கொண்டது ரூ.40–க்கும், பட்டன் ரோஜா ...

Read More »

சொத்தவிளை கடல் அலையில் சிக்கிய 2 சிறுவர்களை காப்பாற்றிய கல்லூரி மாணவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது கதி என்ன? போலீசார் தேடுகிறார்கள்

மேலகிருஷ்ணன்புதூர், ஜன.13- நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடல் அலையில் 2 சிறுவர்களை காப்பாற்றிய கல்லூரி மாணவர் ராட்சத அலையினால் இழுத்து செல்லப்பட்டார். அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- கல்லூரி மாணவர் நாகர்கோவில் கோட்டார் இசங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார். ஆட்டோ டிரைவர். இவரது மகன் கோபி(வயது 18). இவர் பழவிளையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவந்தார். நேற்று மாலையில் கோபி, தனது நண்பர்களான சிவக்குமார், ரகுநாத், பிரதாப், சபரீஸ் ஆகியோருடன் ...

Read More »

ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும் விஞ்ஞானி தகவல்

நாகர்கோவில், ஜன.13- ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும் என்று விஞ்ஞானி சிவன் கூறினார். பாராட்டு விழா தகவல் தொடர்பு சேவைக்காக ஜி சாட்-14 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி.-டி 5 ராக்கெட் மூலம் கடந்த 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக இருந்த சிவன் குமரி மாவட்டம் நாகர்கோவில் சரக்கல்விளையை சேர்ந்தவர். இவர் திருவனந்தபுரம் இந்திய விண்வெளித்துறையில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். விஞ்ஞானி சிவன் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் சரக்கல்விளைக்கு வந்தார். அவர் மனைவி ...

Read More »

கொல்லங்கோடு அருகே மீன் பிடிக்க சென்ற போது கடலில் மாயமான மீனவர் மீட்பு

கொல்லங்கோடு, ஜன.13- கொல்லங்கோடு அருகே மீன் பிடிக்க சென்ற போது, கடலில் மாயமான மீனவர் மீட்கப்பட்டார். இதுகுறித்த விவரம் வருமாறு:- மீனவர் மாயம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை கோவில்விளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்துரூஸ் (வயது58). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில், ராஜேந்துரூஸ் நேற்று முன்தினம் அதிகாலையில் தனக்கு சொந்தமான கட்டு மரத்தில் மார்த்தாண்டன் துறை பகுதியில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்றார். பொதுவாக அதிகாலையில் செல்லும் மீனவர்கள் மதியம் 2 மணியளவில் திரும்ப வருவது ...

Read More »

கிள்ளியூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம் அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார்

கருங்கல், ஜன.13- கிள்ளியூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார். பஸ் நிலையம் கருங்கல் அருகே கிள்ளியூரில் பஸ்நிலையம் அமைக்கப் பட்டது. இதை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயங்காமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தை சீரமைக்க கிள்ளியூர் பேரூராட்சி சார்பில் ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தன. இந்தநிலையில் புதுப்பிக்கப் பட்ட பஸ் நிலையத்தில் ...

Read More »

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கிராமம் கிராமமாக சொல்லுங்கள் கட்சியினருக்கு, அமைச்சர் பச்சைமால் வேண்டுகோள்

நாகர்கோவில், ஜன.13- அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கிராமம் கிராமமாக சொல்லுங்கள் என்று ராஜாக்கமங்கலம் ஒன்றிய கூட்டத்தில் அமைச்சர் பச்சைமால் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆலோசனை கூட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தெற்கு சூரங்குடி அருகே உள்ள கொய்யன்விளையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் டி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சகாயஜெயராணி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் எம்.ஜான்சிலின் விஜிலா, கிருஷ்ணதாஸ், ஆர்.ரவி, டி.முருகன், கோணி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பேரவை செயலாளர் என்.எம்.செல்வகுமார் ...

Read More »