Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2190)

கன்னியாகுமரி செய்திகள்

குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குழித்துறை, மார்ச்.1- குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப் பட்டது. வாகன சோதனை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் இக்னேசி யஸ் சேவியர், வருவாய் அதிகாரி சண்முகவேல், டிரைவர் சுரேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அவர்கள் குழித்துறை பகுதியில் சென்ற போது, கேரளாவை நோக்கி ஒரு டெம்போ வேகமாக சென்றது. உடனே, அதிகாரிகள் டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அது நிற்காமல் சென்றது. உடனே அதிகாரிகள் ...

Read More »

குமரி மாவட்ட மீனவ கிராமங்களுக்கு 450 பசுமை வீடுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

நாகர்கோவில், மார்ச்.1- குமரி மாவட்ட மீனவ கிராமங்களுக்கு 450 பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என்று மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக் டரின் நேர்முக உதவியாளர் (பொது- பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமை தாங்கி, மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் கணேசன், உதவி இயக்குனர்கள் நடராஜன் ...

Read More »

பிளஸ்-2 தேர்வு 3-ந் தேதி தொடங்குகிறது: ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோருக்கு குற்றத்திற்கேற்ப தண்டனை வழங்கப்படும் ஆய்வுக்கூட்டத்தில் முதன்மைக்கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

நாகர்கோவில், மார்ச்.1- பிளஸ்-2 தேர்வுகள் 3-ந் தேதி தொடங்க இருப்பதையொட்டி நடந்த ஆய்வுக்கூட்டத்தில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோருக்கு குற்றத்திற்கேற்ப தண்டனை வழங்கப்படும் என்று முதன்மைக்கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிளஸ்-2 தேர்வு வருகிற 3-ந் தேதி பிளஸ்-2 தேர்வுகள் தொடங்குகின்றன. இதற்கான வினாத்தாள்கள் 3 கல்வி மாவட்டங்களுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்கூட்டம் இந்தநிலையில் ...

Read More »

திற்பரப்பு தடுப்பணையில் மூழ்கி சிவாலய ஓட்டத்திற்கு வந்த பக்தர் பலி கேரளாவை சேர்ந்தவரா?

திற்பரப்பு, பிப்.27- சிவாலய ஓட்டத்திற்கு வந்த பக்தர் திற்பரப்பு தடுப்பணையில் மூழ்கி பலியானார். அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவாலய ஓட்டம் குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் முன்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் குவிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தெக்குறிச்சி சிவன்கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து திற்பரப்பு மகாதேவர் ...

Read More »

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 10 குழந்தைகளுக்கு தங்க வளையல் அமைச்சர் பச்சைமால் அணிவித்தார்

நாகர்கோவில், பிப்.26- தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க வளையல்களை அமைச்சர் கே.டி.பச்சைமால் அணிவித்தார். 10 குழந்தைகள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-ந்தேதி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவிக்கப்படும் என்று குமரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேவியர் மனோகரன் அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன. அவற்றுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. ...

Read More »

சொத்தவிளை, வட்டக்கோட்டை கடற்கரையில் 283 முட்டைகள் இட்டு சென்ற கடல் ஆமைகள் வன ஊழியர்கள் கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்து சென்றனர்

மேலகிருஷ்ணன்புதூர், பிப்.26- சொத்தவிளை, வட்டக்கோட்டை கடற்கரையில் கடல் ஆமைகள் 283 முட்டைகளை இட்டு சென்றன. இதை வன ஊழியர்கள் கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். கடல் ஆமைகள் குமரி மாவட்ட கடற்கரையில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். இதனை கைப்பற்றி முட்டை பொரிப்பகத்திற்கு அனுப்பி பொரிக்க வைத்து பின்னர் மீண்டும் அதனை கடலில் விடும் பணியை மாவட்ட வன இலாகாவினர் செய்து வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு மாவட்ட வன அதிகாரி ரிக்டோ சிரியாக் ...

Read More »