Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2189)

கன்னியாகுமரி செய்திகள்

ஈரோட்டில் திங்கள்சந்தை பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் எரியும் தீயுடன் கட்டிப்பிடித்ததால் கணவரும் உடல் கருகினார்

ஈரோடு, ஜன.7- ஈரோட்டில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை டிரைவர் உயிரோடு எரித்து கொன்றார். எரியும் தீயுடன் மனைவியை கட்டிப்பிடித்ததால் அவரும் உடல் கருகினார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- குடும்பத்தகராறு கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்தவர் திவாகரன். அவருடைய மனைவி கோமதி. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய மகள் ரம்யா (வயது 27). ரம்யாவுக்கும், ஈரோட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் மூர்த்தி என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவனும்-மனைவியும் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சேக்கிழார் வீதியில் குடும்பம் நடத்தி வந்தனர். ...

Read More »

கன்னியாகுமரியில் இருந்து காதலியை மதுரைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் நண்பர்களுடன் சேர்ந்து கூலித்தொழிலாளி வெறிச்செயல்

மதுரை, ஜன.7- கன்னியாகுமரியில் இருந்து காதலியை மதுரைக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியையும், அவருடைய நண்பர்கள் 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். செல்போன் மூலம் பழக்கம் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகள் ரம்யா (வயது 25 பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து முடித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அகத்தீஸ்வரத்தில் கூலி வேலை செய்து வந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். பின்னர் நாள் தோறும் ...

Read More »

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

நாகர்கோவில், ஜன.7- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் சம்பந்தமான குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன் வரவேற்று பேசினார். ...

Read More »

சுசீந்திரம் அருகே குளத்தில் மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு

கன்னியாகுமரி, ஜன.6– சுசீந்திரம் அருகே உள்ள குத்துக்கல் பகுதியில் விவசாய பாசனகுளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால், இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த மீன்களை உணவிற்கு பயன்படுத்துவதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் இன்று அதிகாலை குளத்தில் வலையை விரித்தனர். இந்த வலையை அவர்கள் குளத்தில் இருந்து மீட்கும்போது ராட்சத மலைப்பாம்பு சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அந்த வலையை குளத்தில் இருந்து எடுக்க முடியாமல் அவர்கள் திணறினார்கள். உடனே, இதுபற்றி அவர்கள் சுசீந்திரம் ...

Read More »

இரணியல் அருகே சொத்தை எழுதி தரமறுத்த தாயை கொன்ற மகன் கைது

இரணியல், ஜன.6- இரணியல் அருகே சொத்தை எழுதிக்கொடுக்க மறுத்ததால் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். தாய் கொலை இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு சுண்டவிளையை சேர்ந்தவர் அழகியநாடார். இவரது மனைவி கனகம்மாள் (வயது 70). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கனகம்மாள் பெயரில் அதே பகுதியில் 28 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயரில் எழுதித்தருமாறு அவரது மகன் நெல்சன் கேட்டுவந்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவும் சொத்து விஷயமாக தனது தாயார் கனகம்மாளிடம் நெல்சன் பேசியதாக ...

Read More »

அஞ்சுகிராமம் அருகே கொலை செய்யப்பட்ட பெண் கள்ளக்காதலி புதுமாப்பிள்ளையை போலீஸ் தேடுகிறது

அஞ்சுகிராமம், ஜன.6- அஞ்சுகிராமம் அருகே கொலை செய்யப்பட்ட பெண் கள்ளக்காதலி ஆவார். அவரை கொலை செய்தபுதுமாப்பிள்ளையை போலீசார் தேடிவருகிறார்கள். கட்டிட தொழிலாளி ஈத்தாமொழி அருகே பொழிக்கரை மேலபுதூரைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவருடன் ராஜாக்கமங்கலம் சுனாமி காலனியைச் சேர்ந்த தனசிங்கின் மனைவி சுமித்ரா (36) கட்டிட வேலைக்கு சென்றார்.தனசிங் வெளிநாட்டில் வேலை பார்த்தார்.இதனால் சந்திரனுடன் சுமித்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாகி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.சந்திரன் அடிக்கடி சுமித்ரா வீட்டுக்கு வந்து சென்றார்.இதை கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் ...

Read More »