Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2188)

கன்னியாகுமரி செய்திகள்

காவல்கிணறு-களியக்காவிளை இடையே சாலையை அகலப்படுத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, மார்ச்.4- காவல்கிணறு-களியக்காவிளை இடையே சாலையை அகலப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பொதுநல மனு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் பாரதிகண்ணன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணற்றில் தொடங்கி களியக்காவிளையில் முடிவடைகிறது. காவல்கிணறு-களியக்காவிளை சாலையில் தினமும் 50 ஆயிரம் கனரக வாகனங்கள், 1 லட்சம் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. 45 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை இருவழிச்சாலையாக ...

Read More »

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயங்க தொடங்கின

குழித்துறை, மார்ச்.4- மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முதல் பஸ்கள் இயக்கம் தொடங்கின. புதிய பஸ் நிலையம் மார்த்தாண்டத்தில் நவீன முறையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை கடந்த மாதம் காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ஆனால், பஸ் நிலையத்தின் உள்ளே பணிகள் முழுமையாக நிறைவடையாததால், பஸ்கள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால், பஸ்கள் மார்த்தாண்டம் நகரின் ஆங்காங்கே நின்று இயங்கி வந்தன. எனவே, பஸ் நிலைய பணிகளை விரைவில் முடித்து பஸ்கள் இயக்கம் ...

Read More »

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், மார்ச்.4- கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கத்தை ஆதரித்து அமைச்சர் பச்சைமால் நேற்று பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பிரசாரம் தொடக்கம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டு நேற்று பிரசாரத்தை தொடங்கினார். இவர் பிரசாரம் தொடங்கிய அதே நேரத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரான குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கத்தை ஆதரித்து அமைச்சர் பச்சைமால் பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரசாரத்தின் தொடக்க ...

Read More »

குமரி மாவட்டத்தில் 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர் கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில், மார்ச்.4- குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை நேற்று 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு மையத்துக்கு கலெக்டர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் 3 கல்வி மாவட்டங்களிலும் 205 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 24 ஆயிரத்து 252 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 10 ஆயிரத்து 662 மாணவர்களும், 13 ஆயிரத்து 590 மாணவிகளும் அடங்குவர். பிளஸ்-2 ...

Read More »

பூதப்பாண்டி அருகே பிளஸ்–2 மாணவி கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், மார்ச்.3– பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூரை சேர்ந்தவர் உஷா(வயது 17– பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இன்று பிளஸ்–2 தேர்வுகள் தொடங்கியதையொட்டி நேற்று முன்தினம் இரவு உஷா வீட்டில் படித்துக் கொண்டு இருந்தார். நேற்று காலை உஷாவின் பெற்றோர் எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இதையடுத்து மகள் மாயமானது குறித்து உஷாவின் தந்தை பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில் வீட்டில் படித்துக் கொண்டிருந்த ...

Read More »

பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை: கூட்டுறவு பாங்கி தலைவர் கைது

நாகர்கோவில், மார்ச்.3– களியக்காவிளை அருகே உள்ள மலையடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு பாங்கியின் தலைவராக இருப்பவர் சுரேந்திரன் (வயது 53). இந்த பாங்கியில் சித்ரலேகா (40) என்ற பெண் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 1–ந் தேதி சித்ரலேகா அலுவலகத்தில் தனியாக அமர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது சுரேந்திரன் அங்கு வந்து சித்ரலேகாவிடம் தகாத வார்த்தைகள் பேசி ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரலேகா பாங்கியில் இருந்து வெளியேறி நேராக பளுகல் போலீஸ் நிலையம் சென்றார். பாங்கி தலைவர் ...

Read More »