Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2187)

கன்னியாகுமரி செய்திகள்

குமரி மாவட்டத்தில் ரூ.10¾ கோடி செலவில் கால்வாய் சீரமைப்பு பணிகள் பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

நாகர்கோவில், மார்ச்.6- குமரி மாவட்டத்தில் ரூ.10¾ கோடி செலவில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். கடைவரம்பு நிலத்துக்கு பாசனம் குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் அடித்து வருகிறது. அணைகளில் நீர்மட்டம் குறைகிறது. இதற்கிடையே கும்பப்பூ நெல் அறுவடை பல இடங்களில் முடிந்துள்ளன. இதனால் பெருஞ்சாணி அணை கடந்த 2 தினங்களுக்கு மூடப்பட்டது. தோவாளை கால்வாய், என்.பி. கால்வாய் மூலம் கடைவரம்பு நிலங்களுக்கு மட்டும் பேச்சிப்பாறை அணை தண்ணீர் செல்கிறது. மேலும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் ...

Read More »

கத்தோலிக்க- சி.எஸ்.ஐ. பிஷப்களுடன், 6 அமைச்சர்கள்- அ.தி.மு.க. வேட்பாளர் சந்திப்பு

நாகர்கோவில், மார்ச்.6- நாகர்கோவிலில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. பிஷப்களுடன் 6 அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கம் ஆகியோர் சந்தித்து ஆசிபெற்றனர். கோட்டார் ஆயருடன் சந்திப்பு தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், செந்தூர்பாண்டியன் ஆகியோர் நேற்று நாகர்கோவில் வந்தனர். பின்னர் அவர்களும், அமைச்சர் கே.டி.பச்சைமால், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிவசெல்வராஜன், மேற்கு மாவட்ட ...

Read More »

வருகிற 9-ந் தேதி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும் இடம் நாகர்கோவில் பொருட்காட்சி திடல் மைதானத்துக்கு மாறுகிறது அமைச்சர்கள் குழு பார்வையிட்ட பின்னர் முடிவு

நாகர்கோவில், மார்ச்.6- வருகிற 9-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும் இடம் நாகர்கோவில் பொருட்காட்சி திடலுக்கு மாறுகிறது. அமைச்சர்கள் குழு பார்வையிட்ட பின்னர் இந்த இடம் முடிவானது. முதல்-அமைச்சர் வருகை பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல் கட்டமாக 16 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி நாகர்கோவிலில் வருகிற 9-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண் தங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் ...

Read More »

திங்கள்சந்தை அருகே நகை- பணத்திற்காக மூதாட்டி கொலை போலீசார் தீவிர விசாரணை

இரணியல், மார்ச்.6- இரணியல் அருகே நகை- பணத்திற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் திங்கள்சந்தை அருகே வடக்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் மரிய புஷ்பம்(வயது 62). இவரது கணவர் விசுவாசம். மரிய புஷ்பம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து வந்து இப்பகுதியில் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவர் பால் வியாபாரிகளிடம் இருந்து பாலை வாங்கி அதை வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் ...

Read More »

சாமிதோப்பு அருகே பயங்கரம் ரெயில் மோதி பெண்-சிறுமி உடல் சிதறி சாவு ஆற்றில் குதித்து 3 பேர் உயிர் தப்பினர்

தென்தாமரைகுளம், மார்ச்.5- சாமிதோப்பு அருகே ரெயில்வே ஆற்றுப்பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது ரெயில் மோதியது. இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணும், சிறுமியும் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். ஆற்றில் குதித்து 3 பேர் உயிர் தப்பினர். அய்யா அவதார தின விழா அய்யா வைகுண்டசுவாமியின் 182-வது அவதார தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டம் சாமிதோப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஈத்தாமொழி அருகே உள்ள காத்தாடிதட்டு என்ற ஊரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ...

Read More »

தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 483 பேர் கைது

திருவிதாங்கோடு, மார்ச்.5- தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 483 பேர்களை போலீசார் கைது செய்தனர். ஆற்றூரில் மேடை சூறை குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 1-ந் தேதி அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குமரி மேற்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஜான்ஜேக்கப் எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ஆற்றூரை நோக்கி ஊர்வலமாக ...

Read More »