Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2180)

கன்னியாகுமரி செய்திகள்

வடக்குதாமரைகுளம் அருகே மூதாட்டி வீட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு

தென்தாமரைகுளம், மார்ச்.20- வடக்குதாமரைகுளம் அருகே இரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தசம்பவம் குறித்து கூறப்படுவதாவது:- கள்ளக்காதல் வடக்கு தாமரைகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் நாகர்கோவிலில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு ஓட்டலில் சர்வராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கங்கா(36). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நாகர்கோவில் செட்டிக்குளம் அருகில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை ...

Read More »

நாகர்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், மார்ச்.20- நாகர்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை, உதவி கலெக்டர் சங்கர்லால் குமாவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 24-ந்தேதி நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாகர்கோவிலில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரியும், உதவி கலெக்டருமான சங்கர்லால் குமாவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ...

Read More »

குமரி மாவட்டத்துக்கு வந்த எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள்கள் அறைகளில் வைத்து ‘சீல்’ வைப்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில், மார்ச்.20- குமரி மாவட்டத்திற்கு வந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான வினாத்தாள்கள் அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 29 ஆயிரத்து 651 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் உள்ள 108 பள்ளிகளில் படிக்கும் 8 ஆயிரத்து 727 மாணவ-மாணவிகளும், தக்கலை கல்வி மாவட்டத்தில் உள்ள 149 பள்ளிகளில் படிக்கும் ...

Read More »

அஞ்சுகிராமம்: மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு

நாகர்கோவில், மார்ச்.19– அஞ்சுகிராமம் அருகே இரவிபுதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆடலின் கிளாடிஸ். நேற்று முன்தினம் பள்ளியில் 10–ம் வகுப்பு கணித பாட திருப்புதல் தேர்வு நடந்தது. தேர்வுக்கு முன்பு மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அங்கு தலைமை ஆசிரியை ஆடலின் கிளாடிஸ் சென்று பார்வையிட்டார். அப்போது ஒரு மாணவர் மட்டும் கணித பாடத்துக்கு பதில் அறிவியல் பாடம் படித்துக்கொண்டிருந்தார். இன்று என்ன தேர்வு என்று தெரியாமலேயே அறிவியல் பாடத்தை படித்துக்கொண்டிருப்பதாக கூறி அந்த மாணவரை ஆடலின் கிளாடிஸ் ...

Read More »

நாகர்கோவிலில் திடீர் கோடை மழை

நாகர்கோவில், மார்ச் 19– குமரி மாவட்டத்தில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலம் இப்போதே தொடங்கி விட்டதோ என்று மக்கள் எண்ணும்படி வெயில் சுட்டெரித்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் பொது மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் கானல் நீர் தெரியும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் தர்ப்பூசணி, இளநீர், குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் இலங்கையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த ...

Read More »

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் வாலிபர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

நாகர்கோவில், மார்ச்.19- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். வெளிநாட்டு வேலை நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்தவர் ஆதிமோகன். இவர் மூலச்சலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நிர்வாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு பிரதீப் ஜவகர், அபினேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருமே என்ஜினீயர்கள் ஆவர். ஆனால் அவர்கள் வேலை கிடைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ...

Read More »