Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2170)

கன்னியாகுமரி செய்திகள்

குமரி மாவட்டத்தில், 5 இடங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான முதல் கட்ட பயிற்சி

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் 5 மையங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான முதல் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. இந்த பயிற்சியில் 3,750 பேர் கலந்து கொண்டனர். பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 9 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக வருகிற 24-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 24-ந் தேதி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 29-ந் தேதி ...

Read More »

பாலபிரஜாதிபதி அடிகளாரை சந்தித்து ஆசிபெற்றார் வசந்தகுமார்

நாகர்கோவில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். முதலில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றிபெற்றார். பல்வேறு மீனவ சங்க பிரதிநிதிகளும் வசந்தகுமாரின் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து ஆதரவு தெருவித்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் தியோடர் சேம் தலைமையிலான கிறிஸ்தவ ஐக்கிய சேனை என்ற அமைப்பு அதரவு அளிப்பதாக அறிவித்தது. கிறிஸ்தவ பிஷப் உள்பட பல்வேறு மத தலைவர்களை தற்போது வசந்தகுமார் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் விளையாட்டு துறையில் வசந்தகுமார் மிகுந்த ...

Read More »

ஜெ. பிரதமரானால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்: மதுரை ஆதீனம்

நாகர்கோவில், ஏப்.3- கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்தங்கத்தை ஆதரித்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மதுரை ஆதீனம் பேசியதாவது:– இந்திய நாட்டை வல்லரசாக்க ஜெயலலிதாவால் தான் முடியும். புனித ஜார்ஜ் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை எம்.ஜி.ஆர். 3 முறை ஓட்டினார். அதன்பிறகு ஜெயலலிதா 3–வது முறையாக ரெயிலை ஓட்டி வருகிறார். 2014 பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், ஜெயலலிதா செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை ஓட்டப்போகிறார். அதற்கு பச்சைக்கொடி காட்டப் போகிறவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள். அவர் முதல்–அமைச்சர் மட்டுமல்ல, நெருப்பாற்றில் ...

Read More »

குமரி மாவட்ட தி.மு.க. பிரமுகர் ஜி.எம்.ஷா மரணம் கருணாநிதி இரங்கல்

நாகர்கோவில், ஏப்.3- குமரி மாவட்ட தி.மு.க. பிரமுகர் ஜி.எம்.ஷா நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜி.எம்.ஷா மரணம் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக பதவி வகித்தவரும், குமரி மாவட்ட மூத்த நிர்வாகியுமான ஜி.எம்.ஷா (வயது 80). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது ...

Read More »

காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி: மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைய முயற்சி செய்வேன் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கம் பேட்டி

நாகர்கோவில், ஏப்.3- குமரி மாவட்டத்தில் கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி செய்யவும், மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்வேன் என்று கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கம் உறுதி கூறினார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கம் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீண்டநாள் கோரிக்கைகள் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் ஆசியோடு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் குமரி மாவட்ட மக்களின் ...

Read More »

பா.ஜனதா ஆட்சி அமைந்தால் குமரி மாவட்டம் முழுமையான வளர்ச்சி பெறும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

திருவிதாங்கோடு, ஏப்.3- பா.ஜனதா ஆட்சி அமைந்தால் குமரி மாவட்டம் முழுமையான வளர்ச்சி பெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். செயல்வீரர்கள் கூட்டம் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் தக்கலை ஒன்றியம் மற்றும் பத்மநாபபுரம் நகர செயல்வீரர்கள் கூட்டம் தக்கலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தக்கலை ஒன்றிய பா.ஜ.க தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் நகர தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வக்கீல் பிரதீப் வரவேற்று பேசினார். இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:- ...

Read More »