Home » கன்னியாகுமரி செய்திகள் (page 20)

கன்னியாகுமரி செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாச பாடம் நடத்திய விவகாரம்: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் வகுப்பறையில் மாணவ- மாணவிகளிடம் ஆபாசமாக பாடம் நடத்தியதாக 2 மாணவிகளால் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஆசிரியர் கிறிஸ்துதாசை, முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Read More »

எல்.ஐ.சி. முகவரிடம் ரூ.71 ஆயிரம் அபேஸ்

வில்லுக்குறி அருகே தினவிளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 68). எல்.ஐ.சி. முகவரான இவர் அரசியல் கட்சி நிகழ்ச்சியின் கூட்டத்தை காண வில்லுக்குறி சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலுக்கிடையே அவர் அந்த நிகழ்ச்சியை பார்த்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்ட போது பேன்ட் பாக்கெட் கிழிக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.71 ஆயிரத்தையும் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்மநபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ...

Read More »

சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

குளச்சல் அருகே உள்ள இரும்பிலி, பனவிளை வழியாக இயங்கி வந்த தடம் எண் 5ஜி.வி., 9 ஜெ, 9 ஜி மற்றும் 88 டி ஆகிய அரசு பஸ்கள் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இந்த பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த மாதம் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) மாநில குழு உறுப்பினர் சுசீலா, மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்த இரும்பிலி சந்திப்பில் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை ...

Read More »

தாணுமாலயசாமி கோவில் வரலாற்றை பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு

சுசீந்திரம் கோவில் தாணுமாலயசாமி கோவில் வரலாற்றை பக்தர்கள் அறிந்து கொள்ள ரூ.8½ லட்சத்தில் தொலைகாட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களின் தல வரலாற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்த்து கோவிலின் சிறப்பு மற்றும் திருவிழாக்கள் குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தல வரலாற்றை கோவிலுக்கு வருகின்ற சுற்றுலா ...

Read More »

நாகர்கோவிலில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி;மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. போட்டியானது நாகர்கோவில் புறவழிச்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு இருந்து தொடங்கியது. போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் என தனித்தனியாக மொத்தம் 6 பிரிவுகளில் சைக்கிள் போட்டி நடைபெற்றது. போட்டியில் முதல் 3 இடங்களில் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதாவது 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் அனந்த நாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ...

Read More »

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

நாகர்கோவில் சவேரியார் ஆலய சந்திப்பு முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அங்கு சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை சாலை, செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதானம், ராமன்புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு வருகிறது. வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கப்படுவதால் ...

Read More »