Home » கன்னியாகுமரி செய்திகள் (page 2)

கன்னியாகுமரி செய்திகள்

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் பயிற்சி முகாம் தொடக்கம் – மாறி வரும் தொழில் நுட்பங்களுக்கேற்ப மாணவ-மாணவிகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

நாகர்கோவில், சுங்கான் கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் தொடக்க விழா கலெக்டர்அரவிந்த் தலைமையில் நடந்தது. மேயர்மகேஷ் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது:- சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டும். ஏற்றத்தாழ்வு களுக்கு இடம் கொடுக்காமலும், ஐ.சி.டி. அகாடமி வாயிலாக 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு சூழலி யலுக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு தொடர்பான பல்வேறு திறன் திட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியின் நோக்கமே ...

Read More »

கன்னியாகுமரியில் பேன்சி ஸ்டோரில் ரூ.1¾லட்சம் கொள்ளை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பலரும் இந்தக் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். எனவே எப்போதும் கடை வீதி மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும். இங்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்‌ஷாராம் (வயது 45) என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக கடை நடத்தி வரும் இவர், கன்னியாகுமரி நடுத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது பரிவேட்டை திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கன்னியாகுமரியில் அதிகமாக ...

Read More »

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள திருவள்ளுவர் சிலையில் படிந்துள்ள உப்பு தன்மையை அகற்ற காகித கூழ் பூசும் பணி தீவிரம்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்தசிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்ப டையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடை பெற்றுவருகிறது. இந்த பணி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு ...

Read More »

விஜயதசமி விழா கோலாகல கொண்டாட்டம்- கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம்

கல்வி, விளையாட்டு, தொழில் என எதை தொடங்குவதாக இருந்தாலும், அதற்கு நல்ல நாள் பார்த்து செய்வது வழக்கம். ஆனால் இந்த நாளில் செய்தால், அது மிகுந்த வளர்ச்சி அடையும் என கருதப்படும் நாள் தான் விஜயதசமி. ஆயுத பூஜையின் மறுநாள் வரும் விஜயதசமி நாள், கல்வி கற்பவர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். இந்த ஆண்டு இன்று(புதன்கிழமை) விஜய தசமி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று ஆயுதபூஜை கொண்டாடிய அனைவரும் பூஜையில் வைத்த தொழில் கருவிகள், புத்தகங்கள் போன்றவற்றை விஜயதசமி நாளான இன்று மீண்டும் ...

Read More »

1750 வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஐ.டி – தனியார் பணிக்கான சிறப்பு பயிற்சி

இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான இளை ஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கி ன்றனர். தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்களில் ஏராளமான பணி வாய்ப்பு கள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் திறன் படைத்த தகுதியான பணியாளர்களைத் தேடி வருகின்றனர். இந்த இடைவெளிக்கு காரணம், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நவீன தொழில்நுட்பத்திறன் மற்றும் மென்திறன்கள் இளைஞர்களிடம் குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வேலை யில்லா பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றோ ருக்கு தொழில்நுட்பத்திறன் மற்றும் மென்திறன்களை நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரம் உயர்த்திப் பயிற்சியளித்து தனியார் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் ...

Read More »

கோட்டாரில் இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் இன்று கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், துப்புரவு பணியாளர்களான எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டும், குமரி மாவட்ட கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து போராட்டம் ...

Read More »