Home » கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி செய்திகள்

அமிர்தா கல்லூரியில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா

15 ஆகஸ்ட் 2022 நாகர்கோவில் இறச்சக்குளத்தில் இயங்கி வரும் அமிர்தா கல்வி நிறுவனத்தில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் அமிர்தா கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குநர் முனைவர் டி.கண்ணன், மற்றும் நிர்வாக மேலாளர் வி. பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஓருங்கினைப்பாளா் முனைவர் A..குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து அமிர்தா கல்வியியல் கல்லூரியின் முதல்வர்முனைவர் எம்.கிருஷ்ணகுமார் அவர்கள் மூவர்ண கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள். மேலும் ...

Read More »

பூதப்பாண்டி அருகே மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

சுதந்திர தின விழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து பூதப்பாண்டி அருகே மதுவை பதுக்கி விற்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் திட்டுவிளை குருசடி பகுதிக்கு சென்றனர். அங்கு மது விற்றதாக செல்வசிங் (வயது 49), பூதப்பாண்டி புளியங்குளம் செல்வி (52) மற்றும் அரும நல்லூர் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஷோபனா தாஸ் (49) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 224 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Read More »

பஸ்கள் மோதல்; 2 பேர் காயம்

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை அனந்தமங்கலம், தெற்குதெருவை சேர்ந்த சதீஸ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் புலியூர்குறிச்சி அருகில் வரும்போது பின்னால் வந்த கேரள அரசு பஸ் மோதியது. இதில் தமிழக அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் கேரள அரசு பஸ்சில் பயணம் செய்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மனோன்மணி (வயது 57), நாகர்கோவிலை சேர்ந்த ஷீபா (28) ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த ...

Read More »

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தை சேர்ந்தவர் கனகபாஸ். இவருடைய மகள் மெர்சி (வயது 16). இவர் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு சிறு வயதில் இருந்து கண் பார்வை குறைபாடு இருந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக மெர்சி மன வருத்தத்தில் இருந்துள்ளார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். இந்த நிலையில் மெர்சி சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கில் தொங்கினார். சத்தம் ...

Read More »

கடத்தப்பட்ட டெம்போவில் ரூ.5 லட்சம் இருந்ததாக நாடகமாடிய டிரைவர்

கருங்கல் அருகே உள்ள வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கருங்கலில் வாழைக்குலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, திருவனந்தபுரம் சந்தையில் வாழைக்குலை வியாபாரம் செய்யும் ஒருவர் ரூ.10 லட்சம் வரை கொடுக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவனந்தபுரம் வியாபாரி வேறொரு நபரிடம் இருந்து வாழைக்குலைகளை வாங்கி மினி டெம்போவில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். இதை அறிந்த கருங்கல் வியாபாரி மினி டெம்போவை மடக்கி பிடித்து அதில் இருந்து டிரைவர் இறக்கிவிட்டு வாழைக்குலைகளுடன் டெம்போவை கடத்தி சென்றார். இதுகுறித்து டிரைவர் கருங்கல் போலீஸ் ...

Read More »

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆடி கடைசி திங்கட்கிழமையையொட்டி நேற்று புஷ்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மாலை 6.30 மணிக்கு நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின்பு தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய ...

Read More »