Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் (page 859)

உலகச்செய்திகள்

விமான தாக்குதலில் 22 பேர் பலியான சம்பவம்: ஆப்கானிஸ்தான் டாக்டரிடம் மன்னிப்பு கோரினார் ஒபாமா

வாஷிங்டன்: கடந்த வார இறுதியில் ஆப்கானிஸ்தானின் குண்டஸ் மருத்துவமனை மீது அமெரிக்க படையினர் நடத்திய விமான தாக்குதலில்  பெண்கள், குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மருத்துவமனையின் தலைவர் ஜோன்னே  லெயுவிடம் தொலைபேசியில் மன்னிப்பு கோரினார். அதன்பின் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியிடம் பேசிய ஒபாமா, இறந்தவர்களுக்காக தனது இரங்கலையும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில்  வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என கூறியதோடு, ஆப்கானிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுவதாக உறுதியளித்தார்.

Read More »

உலக மசாலா: காகித கார்!

காகித மடிப்புகளின் மூலம் பல்வேறு உருவங்கள் செய்யும் கலை ஒரிகாமி. லண்டனில் உள்ள ஒரு கார் நிறுவனம், காகித அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி கார் ஒன்றை உருவாக்கி சாதனை செய்திருக்கிறது. இரும்பு, அலுமினியம் சட்டங்களின் மீது அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி வடிவங்களைப் பொருத்தியிருக்கிறார்கள். காரின் கூரை, கதவு, ஸ்டீரிங் அனைத்தும் அட்டைகளால் ஆனவை. இந்த காரை சாதாரண கார்களைப் போல சாலைகளில் செலுத்தியும் காட்டியிருக்கிறார்கள். அட்டகாசம்! அடுத்த ஆண்டு ஜப்பானில் தானாக இயங்கக்கூடிய ரோபோ டாக்ஸிகள் சாலைகளில் வலம் வர இருக்கின்றன. ஃபுஜிசவா, கனகவா ...

Read More »

மண்டையோடும் இல்லை, மூளையில் பாதி இல்லை: மரணத்துடன் போராடும் குழந்தை

சென்னை: அமெரிக்காவில் மண்டை ஓடு இல்லாமலும், பாதி மூளையுடனும் பிறந்த குழந்தை உயிர் பிழைத்து பலருக்கும் நம்பிக்கை அளித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரான்டன் புவல். அவரது மனைவி பிரிட்டனி புவல். அவர்களின் 13 மாத குழந்தை ஜாக்சன். ஜாக்சன் பிறந்தபோது அவருக்கு மண்டை ஓட்டின் பெரும்பகுதி இல்லை. மேலும் மூளையும் பாதியாகத் தான் இருந்தது. இந்த குழந்தை உயிர் பிழைப்பது கடினம், சில நாட்கள் தான் உங்களுடன் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

Read More »

சீனாவில் சூறாவளிக்கு 19 பேர் பலி

சீனாவின் தெற்கில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் கடந்த 4 மற்றும் 5-ம் தேதி வீசிய கடும் சூறாவளிக்கு 19 பேர் இறந்தனர். கனத்த மழையுடன் 111 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் இம்மாகாணத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சுவர், கூரை இடிந்து விழுந்தது, நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பால் படகுகள் மோதிக் கொண்டது என பல்வேறு சம்பவங்களில் 19 பேர் இறந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு படகு கவிழ்ந்த விபத்தில் 4 மீனவர்களை காணவில்லை. முஜிகே என்று பெயரிடப்பட் டுள்ள இந்த சூறாவளி இந்த ...

Read More »

2 பாட்டில் கோமியத்துடன் நியூசிலாந்து போய் இறங்கிய இந்தியப் பெண்ணுக்கு ரூ. 26,000 அபராதம்

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இரண்டு பாட்டில்களில் கோமியம் வைத்திருந்த இந்திய பெண்ணுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் நியூசிலாந்து சென்றுள்ளார். வெல்லிங்டனில் உள்ள விமான நிலையத்தில் அவர் தான் இரண்டு பாட்டில்களில் கோமியம் வைத்திருந்ததை உடைமைகளை பரிசோதிப்பவர்களிடம் தெரிவிக்கவில்லை. பின்னர் பரிசோதனையில் அவர் கோமியம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த பெண் மருத்துவ காரணத்திற்காக கோமியத்தை கொண்டு சென்று சிக்கியுள்ளார். மருத்துவ காரணத்திற்காக கோமியத்தை ...

Read More »

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: மரபணு ஆராய்ச்சியாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவால் அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் அஜிஸ் சன்கார், தாமஸ் லிண்டால் மற்றும் இங்கிலாந்தின் பால் மோட்ரிச் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. மரபணுக்கள் என்பவை நிலைத்தன்மை கொண்டதாக கருதப்பட்டு வந்து. ஆனால் மரபணுக்கள் சேதமடைகிறது என்றும் மரபணு குறைகளை சீரமைக்கும் ...

Read More »