Templates by BIGtheme NET

உலகச்செய்திகள்

சிட்னி ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள்… 13 பேர் சிறைப்பிடிப்பு.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு!

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 13 பேரை சிறைப்பிடித்துள்ளனர். துப்பாக்கி முனையில் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஹோட்டல் ஜன்னல் வழியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி என சந்தேகிக்கப்படும் கொடி ஒன்றையும் அவர்கள் பறக்க விட்டுள்ள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு வெளியே போலீஸாரும், மீட்புப் படையினரும், கமாண்டோக்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் உடனடியாக மூடப்பட்டது. மேலும் ஓபரா ஹவுஸ், சிட்னி பாலம் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. ...

Read More »

‘டச் ஸ்கிரீன்’ போன் வாங்கித் தர தந்தை மறுப்பு: பூச்சி மருந்து குடித்து 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உயர்ரக செல்போன் வாங்கித் தர தந்தை மறுத்ததால், மனமுடைந்த 8ம் வகுப்பு மாணவர் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளம் மாநிலம், முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள டெண்ட்டுலியா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மபிபுல் சர்க்கார். இவரது மகன் மசுத் சர்க்கார்(15), அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். தன் நண்பர்கள் சிலர் டச் ஸ்கிரீன் செல்போன் பயன்படுத்துவதைப் பார்த்து, தனக்கும் அதுபோல் ஒன்று வேண்டும் என தந்தையிடம் நச்சரித்துள்ளான் மசுத். ...

Read More »

மோடிக்கு 15-வது இடம்: போர்ப்ஸ் வெளியீடு

நியூயார்க்: உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் வரிசையில் மோடிக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் பிற விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 72 தலைவர்கள் பல்வேறு பரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். இந்த வரிசையில் ரஷ்ய அதிபர் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஓபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சீன அதிபர் ஷின்ஜின்பிங் 3-வது இடம், போப் பிரான்சிஸ் 4-வது இடம், ...

Read More »

நான் ஒரு ‘ஓரினச் சேர்க்கையாளன்’: ஆப்பிள் சிஇஓ டிம் குக் ‘வெளிப்படை’

நியூயார்க்: தான் ஒரு கே(ஓரினச் சேர்க்கையாளர்) என்றும், அதற்காக பெருமைப்படுவதாகவும் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் பத்திரிக்கை ஒன்றில் எழுதியுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் ப்ளூம்பெர்க் பிசினஸ்வீக் பத்திரிக்கையில் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் தனது கருத்துகளை தெரிவித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் ஒரு ‘ஓரினச் சேர்க்கையாளன்’: ஆப்பிள் சிஇஓ டிம் குக் ‘வெளிப்படை’ நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு ‘கே’. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். கேயாக இருப்பது தான் கடவுள் எனக்கு அளித்த ...

Read More »

தென் இலங்கையில் நிலச்சரிவு: 20 பேர் பலி; 300க்கும் மேற்பட்டோர் மாயம்

பதுளை: தென் இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். பதுளை மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் 300 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர் மழையால் தேயிலை தோட்டத்தில் 2 கி.மீ தொலைவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கி இருந்த 120 அறைகளும் நிலச்சரிவில் புதையுண்டன. சேற்றில் புதையுண்டுள்ளவர்களை மீட்க்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

உலகின் முதல் சூரியசக்தி விமானம் வாரணாசி வருகிறது

பயெர்ன், அக். 29- சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமானம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் துவங்கப்பட்ட ‘உலகை சுற்றி வரும் சூரிய சக்தி விமான’ பரிசோதனையின் ஒரு பகுதியாக இந்த விமானம் இந்தியாவில் அகமதாபாத், வாரணாசி நகரங்களில் நிறுத்தப்படுமென தெரிகிறது. ‘சோலார் இம்பல்ஸ்’ எனும் இந்த விமானம் 2300 கிலோ எடையோடு, 27,000 அடி உயரத்தில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. இது குறித்து சோலார் இம்பல்ஸ் விமான பரிசோதனையில் ஈடுபட்டு ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.