Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் (page 7)

உலகச்செய்திகள்

US-warns-nations-against-buying-Venezuelan-oil

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன. கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், ...

Read More »
The-election-rally-involving-the-Nigerian-president

நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி

அபுஜா, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடு நைஜீரியா. ஆப்பிரிக்காவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட 7-வது நாடாகவும் நைஜீரியா விளங்குகிறது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் முகமது புகாரி அதிபராக உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையொட்டி அங்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு முகமது புகாரி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, முன்னாள் துணை அதிபர் அட்டிகு அபுபக்கர் களம் ...

Read More »
The-400yearold-Bonsai-tree-theft-in-Japan

ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சாய்டாமா பிராந்திய பகுதியை சேர்ந்த மூத்த தம்பதி, தங்கள் வீட்டின் அருகே பூங்கா அமைத்து 3 ஆயிரம் போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்கள். போன்சாய் மரங்கள் என்பது இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களை உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி தொட்டிகளில் வளர்ப்பது ஆகும். இந்த நிலையில், அந்த தம்பதியின் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் ...

Read More »
The-Prime-Minister-nomination-in-violation-of-the-rules

விதிமுறைகளை மீறி பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு – தாய்லாந்து இளவரசி மன்னிப்பு கோரினார்

பாங்காக், தாய்லாந்தில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயக ஆட்சியை கொண்டுவர வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து, மன்னர் மகா வஜ்ரலோங்கோன் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட்டார். அதன்படி அடுத்த மார்ச் 24-ந் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் இதனை கடுமையாக எதிர்த்தார். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார். இதனையடுத்து பிரதமர் ...

Read More »
Turkish-coup-attempt-The-order-to-arrest-1112-people

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 1,112 பேரை கைது செய்ய உத்தரவு

அங்காரா, துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார். அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என ...

Read More »
SpaceX-launch-When-will-Elon-Musks-car-CRASH-into-Earth

விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா ரோட்ஸ்டர் கார் காஸ்மிக் கதிர்களால் பாதிப்பு

பால்கான் ஹேவி என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், டெஸ்லா ரோட்ஸ்டர் என்ற காரை விண்வெளிக்கு அனுப்பியது. இதன் விலை சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.1.41 கோடி ) ஆகும். ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலன் மஸ்க்கின் விருப்பப்படி இந்த கார் கடந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஸ்டார்மேன் என்று அழைக்கப்படும் இந்த கார், விண்வெளியில் ஒரு பில்லியன் ஆண்டுகள் செயல்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று அதனை ...

Read More »