Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் (page 5)

உலகச்செய்திகள்

IS-militants-kill-six-hostages-from-central-Libya

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேர் கொலை

திரிபோலி, லிபிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் அதிபர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. கடந்த பிப்ரவரியில், ஜப்ரா நகரில் உள்ள சோதனை சாவடி மீது நடந்த தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சோதனை சாவடி அழிக்கப்பட்டது. பல வாகனங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் லிபியாவின் மத்திய நகரான ஜப்ராவின் பியுகா பகுதியில் 10 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களை விடுவிக்க தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே ...

Read More »
Rs-9000-crore-loan-fraud-case-Will-Vijay-Mallya-be

ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு: விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு

லண்டன், பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது இன்று தெரியும். இது தொடர்பான தீர்ப்பை லண்டன் கோர்ட்டு வழங்குகிறது. நாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பிஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், ...

Read More »
For-the-first-time-Daughter-of-Russian-president-appeared-on

முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்

மாஸ்கோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எந்த தகவலும் வெளியுலகுக்கு கசிந்தது இல்லை. அவருக்கு 2 மகள்கள் இருப்பதாக மட்டும் தகவல்கள் வெளியானது உண்டு. தனது மகள்கள் பற்றி எப்போதாவது புதின் பாசத்துடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியது உண்டு. கடந்த ஆண்டு, “நான் தாத்தா ஆகி இருக்கிறேன்” என்று அவர் கூறினார். மற்றபடி அவர் குடும்பத்துடன் தோன்றுகிற படங்கள்கூட வெளிவந்தது இல்லை. விடுமுறையைக்கூட அவர் சைபீரியாவுக்கு சென்று மலை ஏறுதல், குதிரை சவாரி செல்லுதல் போன்றவற்றில்தான் கழிப்பது உண்டு. இந்த ...

Read More »
In-United-States-Trump-Chairman-of-the-Executive-Staff

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவராக இருந்து வருபவர் ஜான் கெல்லி. அவர் இந்த மாதத்தின் இறுதியில் பதவி விலகுகிறார். முன்னாள் கடற்படை அதிகாரியான 68 வயது, ஜான் கெல்லிக்கும், ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அவர் பதவி விலகுவதற்கும் அழுத்தங்கள் வந்ததாக தகவல்கள் கூறின. இந்த நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். இதை ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் உறுதி ...

Read More »
The-couple-took-a-naked-picture-of-a-worldrenowned-pyramid

எகிப்தில் உலக புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி நிர்வாண படம் எடுத்த தம்பதி – விசாரணைக்கு உத்தரவு

கெய்ரோ, எகிப்து நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் இன்றைக்கும் சுற்றுலாப்பயணிகளை, வரலாற்று ஆய்வாளர்களை கவர்வதாக அமைந்துள்ளன. அங்கு, உலகின் ஏழு பழைய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிற கிசாவின் கூபு பிரமிடு உள்ளது. புகழ் பெற்ற அந்த பிரமிடின் உச்சிக்கு இரவு நேரத்தில் ஒரு வெளிநாட்டு தம்பதி சென்று, நிர்வாணமாக கட்டித்தழுவி உள்ளனர். இது பற்றிய 3 நிமிட வீடியோ காட்சி, யு டியுப்பில் வெளியாகி எகிப்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அந்த நாட்டின் ...

Read More »
A-monkey-who-kissed-the-girl

புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு

பெண் ஒருவர் குரங்குடன் புகைப்படம் எடுப்பதற்காக அதன் அருகில் அமர்ந்துள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த பெண்ணை முத்த மழையில் மூழ்கடித்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் பெண் ஒருவர் குடும்பத்துடன் குரங்குடன் புகைப்படம் எடுப்பதற்காக அமர்ந்துள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த பெண்ணிற்கு சரமாரியாக முத்தம் கொடுத்துள்ளது.

Read More »