Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் (page 4)

உலகச்செய்திகள்

Judge-tosses-Stormy-Daniels-defamation-suit-against-Trump

டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

லாஸ்ஏஞ்சல்ஸ் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் பிரபல ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் கூறியிருந்தார். ஜனாதிபதி மீதான இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசுவதை ஸ்ட்ரோமி நிறுத்தவில்லை. இந்த நிலையில் டிரம்புடன் உள்ள உறவு குறித்து வெளியில் ஏதும் கூறக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என ஒரு மனிதன் லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக டேனியல் கூறினார். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ...

Read More »
US-minister-meets-with-Saudi-king-Salman

சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு

ரியாத், சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இந்த நிலையில் அவர் சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றார். அங்கு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2–ந் தேதி சென்ற அவர், மாயம் ஆனார். அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. ...

Read More »
Australian-Embassy-to-Transition-to-Jerusalem-Prime-Minister

ஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம்? பிரதமர் ஸ்காட் அறிவிப்பு

கான்பெர்ரா, உலகளாவிய எதிர்ப்புக்கு இது வழிவகுத்தது. ஆனாலும், அடுத்த கட்டமாக கடந்த மே மாதம், ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் பரிசீலித்து வருகிறது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்தார். மேலும், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு அளித்து வருகிற ஆதரவை மறுபரிசீலனை செய்யவும் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதையும் பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறி உள்ளார். ஈரான் அணு ...

Read More »
Moderate-earthquake-rattles-China

சீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனா நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் நேற்று சுமார் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உருவானதாக சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜிங்ஜியாங் மாகாணத்தில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாகாண தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. #Earthquake

Read More »
Vinay-Mittal-wanted-in-bank-fraud-cases-to-the-tune-of-Rs-40

ரூ.40 கோடி வங்கி மோசடியில் சிக்கிய தொழிலதிபரை இந்தோனேசியா இந்தியாவிடம் ஒப்படைத்தது

ஜகர்தா: இந்திய வங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று, திருப்பு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, ஜத்தின் மேத்தா, மெகுல் சோக்சி உள்ளிட்டவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து நீதியின் முன்னர் நிறுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அவ்வகையில், வங்கிகளில் 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு இந்தோனேசியா நாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல தொழிலதிபர் வினய் மிட்டல் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து ...

Read More »
Northern-Irish-writer-Anna-Burns-wins-Booker-Prize

வடக்கு அயர்லாந்து பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் மேன் புக்கர் பரிசை வென்றார்

லண்டன்: வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”. இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி, ஜார்ஜ் சாண்டர்ஸ் உள்பட பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் விருது ...

Read More »