Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் (page 30)

உலகச்செய்திகள்

Georgia-man-arrested-in-FBI-sting-for-allegedly-plotting-to

வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது

வாஷிங்டன் அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான இளைஞர் 21 வயதான ஹஷர் ஜலால் தஹெப் எனவும் அவரிடம் இருந்து கைகளால் வரையப்பட்ட தரை தள வரைபடம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வாஷிங்டனில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற்றிற்கும் அவர் குறிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த தஹெப் என்ற இளைஞர் வின்னெட் கவுண்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »
Britains-Prince-Philip-97-Unhurt-After-Car-Crash-Near

இங்கிலாந்து இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்

இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இளவரசர் பிலிப் தனது காரை பிரதான சாலைக்கு எடுத்து வரும் போது, அவ்வழியாக வந்த மற்றொரு கார் மோதியதாக தெரிகிறது. விபத்து ஏற்பட்ட மற்றொரு காரில் இருந்த இருவர் இலேசான காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்ற பின்னர் வீடு ...

Read More »
Whats-going-to-happen-next-in-the-Brexit-case

நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தெரசா மே அரசு பிழைத்தது ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன?

லண்டன், இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே முடுக்கி விட்டார். இது ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால் இது இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிர்த்தது. இருந்தபோதும் இந்த ஒப்பந்தத்துக்கு கடந்த நவம்பர் மாத கடைசியில் ஐரோப்பிய கூட்டமைப்பு தனது ஒப்புதலை அளித்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது ஒப்புதலை வழங்க ...

Read More »
Indian-at-the-American-Parliamentary-Committee-for

உளவுத்துறைக்கான அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் இந்தியர்

வாஷிங்டன், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இல்லினாய்ஸ் மாகாணத்தின் 8–வது நாடாளுமன்ற மாவட்ட தொகுதியில் இருந்து இவர் தேர்வு பெற்றவர். இவர் உளவுத்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒருவர் இந்த செல்வாக்கு மிகுந்த பதவிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் குறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Read More »
Indra-Nooyi-being-considered-to-lead-World-Bank-report

உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?

நியூயார்க், உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினராக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம், ஜனவரி இறுதியுடன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை தேர்வு செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் கருவூல செயலர் ஸ்டீவன் னுச்சின், தற்காலிக ...

Read More »
Terrorist-attack-in-Kenya-hotel-14-killed

கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல்; 14 பேர் பலி

நைரோபி, நேற்று முன்தினம் மதியம் அந்த ஓட்டல் வளாகத்திற்குள் அல் சபாப் பயங்கரவாதிகள் நுழைந்தனர். அவர்களில் ஒரு பயங்கரவாதி தனது உடலில் கட்டி எடுத்து வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அதைத் தொடர்ந்து மற்ற பயங்கரவாதிகள் நாலாபுறமும் சென்று அங்கிருந்து கொண்டு ஓட்டலில் இருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பதறியடித்தவாறு ஓட்டம் பிடித்தனர். அங்கு குண்டு வெடிப்பு சத்தமும் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தகவல் அறிந்ததும் கென்யா படையினரும், அங்குள்ள பிற நாடுகளின் தூதரகங்களில் ...

Read More »