Home » உலகச்செய்திகள் (page 3)

உலகச்செய்திகள்

Pak-PM-Imran-Khan-trolled-for-posting-Tagores-quote-as

ரவீந்தரநாத் தாகூர் படைப்பை கலீல் ஜிப்ரான் கவிதை என கூறி கேலிக்கு ஆளான இம்ரான்கான்

இஸ்லாமாபாத் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் எழுத்து பிழைகளுடனும், தவறான பொருள்படும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டு வலைத்தள ஆர்வலர்களின் கேலிக்கு உள்ளாவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் இணைந்துள்ளார். இம்ரான்கான் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “யாரேனும் ஞானத்தை புரிந்துகொள்ள மற்றும் அதனை கண்டறிய வேண்டும் என்றாலும், மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கலீல் ஜிப்ரானின் (லெபனான் நாட்டு கவிஞர்) வார்த்தைகள் வழி வகுக்கும்” என்று கூறி “வாழ்க்கை மகிழ்ச்சியானது ...

Read More »
Starving-polar-bear-stuck-in-Russian-industrial-city-barely

ரஷியாவில் இரை தேடி ஊருக்குள் புகுந்த பனிக்கரடி

மாஸ்கோ, ஆர்க்டிக் பனிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக போதிய இரை கிடைக்காமல் 100 கி.மீ. கடந்து, இந்த பெண் பனிக்கரடி நகரத்துக்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரை தேடி குப்பை மேடுகளிலும், சாலையிலும் சுற்றித்திரியும் கரடியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஒரு சிலர் கரடியுடன் புகைப்படம் எடுக்கின்றனர். அந்த கரடியை பிடித்து, ஹெலிகாப்டர் மூலம் அதன் வாழ்விடத்தில் கொண்டுவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள உள்ளூர் அதிகாரிகள், அதுவரை மக்கள் அந்த கரடியை தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டு உள்ளனர். சுமார் ...

Read More »
Queens-cousin-the-Duke-of-Kent-83-involved-in-60mph-car

இங்கிலாந்தில் இளவரசரின் பாதுகாப்பு வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

லண்டன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கதே ஆகிய இருவரும் லண்டனில் இருந்து வின்சர் மாளிகைக்கு காரில் சென்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக போலீசார் காருக்கு முன்னும், பின்னும் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். அப்போது, அரச தம்பதியரின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக தவறுதலான பாதையில் சென்றுவிட்டது. இதில் அந்த வாகனம், சாலையை கடக்க முயன்ற ஒரு மூதாட்டியின் மீது மோதிவிட்டது.இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஐரீன் ...

Read More »
Hero-dog-keeps-badly-injured-woman-warm-for-three-days-after

நன்றியுணர்வை நிரூபித்த நாய்; கார் விபத்தில் சிக்கி 3 நாட்களாக தவித்த பெண் மீட்பு

நியூசிலாந்து நாட்டில் வெல்லிங்டன் பகுதியில் மாஸ்டர்டன் என்ற இடத்தில் கெர்ரி ஜோர்டான் (வயது 63) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பார்டர் கோலி வகையை சேர்ந்த நாய் ஒன்றை பேட் என பெயரிட்டு தனது மகன் போல் வளர்த்து வருகிறார். கடந்த வியாழ கிழமை இவர் தனது வளர்ப்பு நாயுடன் வடக்கு பால்மர்ஸ்டன் பகுதியை நோக்கி காரில் சென்றுள்ளார். அந்த கார் பஹியாதுவா என்ற பகுதியில் செல்லும்பொழுது திடீரென 45 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கால், நெஞ்சு மற்றும் ...

Read More »
Two-of-the-worlds-4-alltime-hottest-temperatures-have

பாகிஸ்தானில் உலகின் நான்காவது அதிகபட்ச வெப்பநிலை – சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம்

குவைத்தில் மிட்ரிபா பகுதியில் பூமியின் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலையும், பாகிஸ்தானின் தர்பாத் பகுதியில் பூமியின் நான்காவது அதிகபட்ச வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் (World Meteorological Organization – WMO) தெரிவித்துள்ளது. வளைகுடா நாடான குவைத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 21ம் தேதியும், பாகிஸ்தானில் 2017ம் ஆண்டு மே 28ம் தேதியும் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வெப்பநிலை பதிவுகளில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்த சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாக ...

Read More »
Strawberry-Moon-2019-What-time-will-the-June-Full-Moon

வானில் 2 நாட்கள் தெரியும் ஸ்ட்ராபெர்ரி மூன் – நாசா

வாஷிங்டன், அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாக இருக்கும், சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது. அது வேறு வகை நிலவு, இது வேறு வகை நிலவு என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும் என்றும், மற்ற சில இடங்களில் பிங்க் நிறத்தில் ஒளிரும் என்றும், இதற்குக் கரணம் அங்குள்ள வளிமண்டல ...

Read More »