Home » உலகச்செய்திகள் (page 20)

உலகச்செய்திகள்

In-the-series-of-explosions-in-Iraq--4-killed

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 4 பேர் பலி

பாக்தாத், ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பெரும் பின்னடைவை சந்தித்தது. பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டு, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் தற்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு மீண்டும் காலூன்றி தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள கிர்குக் ...

Read More »
Attack-on-cargo-ships-Arab-countries-allegations-are

சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்: ‘அரபு நாடுகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’ – ஈரான் திட்டவட்டம்

டெஹ்ரான், ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது முதல், இருநாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. ஈரானை எச்சரிக்கும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை குவித்து இருக்கிறது. இதற்கிடையில், ஓமன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள புஜைரா துறைமுகத்தில் சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட நாசவேலை தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ...

Read More »
Friendship-with-India-will-progress-in-a-positive-path

இந்தியாவுடன் நட்பு நேர்மறையான பாதையில் முன்னேறும் – மோடி பதவி ஏற்பு குறித்து அமெரிக்கா கருத்து

வாஷிங்டன், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- உண்மையிலேயே இது டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி இடையேயான நட்பு மீண்டும் பழைய உற்சாகத்தை அளிப்பதாக இருக்கும். இருதரப்பு ஆதரவு இன்னும் வலுவானதாக இருக்கும். இந்த நட்பில் செயல்திறன், நல்லுறவு அர்ப்பணிப்பு ஆகியவை அடங்கியுள்ளதால் இரு தலைவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு நன்மையாக அமையும். இந்தியாவுடனான நட்பு மிகவும் நேர்மறையான பாதையில் முன்னேறும். இரு நாடுகளின் நட்புறவு மோடி தலைமையில் தொடர்ந்து தழைத்தோங்கும் என நாங்கள் ...

Read More »
Indian-students-achievement-in-spelling-competition-in-the

அமெரிக்காவில் ‘ஸ்பெல்லிங்’ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் சாதனை

வாஷிங்டன், ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாக சொல்லும் ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டி உலகப்புகழ் பெற்றது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த போட்டியில் அண்மை காலமாக இந்திய வம்சாவளி மாணவ-மாணவிகள் கோலோச்சி வருகிறார்கள். இந்த நிலையில் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஸ்னல் ஹார்பர் என்ற இடத்தில் ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து, 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 565 மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் உள்பட ...

Read More »
Flying-car-running-hydrogen-fuel--Introduction-to-the

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் – அமெரிக்காவில் அறிமுகம்

வாஷிங்டன், அமெரிக்காவில் அலக்கா’ஐ டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இந்த பறக்கும் கார் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 6 சுழலிகளின் உதவியோடு, செங்குத்தாக மேலெழும்பி பறக்கும் திறன் படைத்த இந்த பறக்கும் கார், எந்த மாசுவையும் வெளிப்படுத்தாத, மாற்று ...

Read More »
near-rajakkamangalam

அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு உள்ள பூங்காவில் இந்தியாவை சேர்ந்த அர்னவ் குப்தா என்பவர் தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அர்னவ் குப்தா உயிரிழந்தார்.

Read More »