Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் (page 2)

உலகச்செய்திகள்

France-Christmas-market-shooting-3-dead

பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர். இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 3 பேர் ...

Read More »
Google-has-no-plans-to-launch-Chinese-search-engine

“சீனாவுக்கு தனி கூகுள் அறிமுகம் இல்லை” – சுந்தர் பிச்சை திட்டவட்டம்

சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழுவில் புகார்அளிக்கப்பட்டிருந்தது. விசாரணைக்கு நேரில் ஆஜரான சுந்தர் பிச்சை, சீனாவுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம் என்றார். சீனாவில் இண்டெர்நெட் செயல்பட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் கூகுள் 2010-ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Read More »
In-Singapore-Pregnant-wife-Stabbed-with-a-knife-Indian-is

சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டதாவும், முதல் குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனவும் கூறி மயூரியிடம் ஜெயசீலன் தினந்தோறும் தகராறு செய்து வந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் கணவரின் கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 24–ந்தேதி, மயூரி வீட்டை விட்டு ஓடினார். பின்னர் அவர் விபசார அழகிகளாக இருக்கும் தனது முன்னாள் தோழிகளிடம் அடைக்கலம் புகுந்தார். டிசம்பர் 30–ந்தேதி, மயூரி காலை உணவு ...

Read More »
Arrested-in-Canada-Conditional-bail-for-Huawei-Corporate

கனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாய் நிறுவன அதிபர் மகளுக்கு நிபந்தனை ஜாமீன்

வான்கூவர், அமெரிக்கா இந்தப் புகார் மீது விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் கனடாவில் உள்ள வான்கூவர் நகர விமான நிலையத்தில் ஹூவாய் நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணை அங்குள்ள கோர்ட்டில் நடக்கிறது. இதற்கிடையே அவரை ஜாமீனில் விடுவிக்க கோரி பிரிட்டிஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீது விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து ...

Read More »
If-not-escaped-Why-did-Vijay-Mallya-go-with-300-bags

தப்பி ஓடவில்லை என்றால் 300 பைகளுடன் விஜய் மல்லையா சென்றது ஏன்? கோர்ட்டில் அமலாக்கத்துறை வக்கீல் கேள்வி

லண்டன், நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்பு இந்த மனு, நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையாவின் வக்கீல் அமித் தேசாய், ‘‘விஜய் மல்லையா ரகசியமாக வெளியேறவில்லை. ஜெனீவாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்கவே சென்றார்’’ என்று கூறினார். நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதற்கு அமலாக்கத்துறை வக்கீல் டி.என்.சிங் பதிலடி கொடுத்தார். ‘‘ஜெனீவா கூட்டத்துக்காக இந்தியாவை விட்டு சென்றதாக நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. கூட்டத்துக்கு செல்வதாக இருந்தால், 300 பைகளுடனும், பெருமளவு சுமைகளுடனும் யார் செல்வார்கள்?’’ என்று அவர் கேட்டார். ...

Read More »
In-the-parliament-of-Sri-Lanka-Confidence-vote-in-favor-of

இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்

கொழும்பு, இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26–ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் அறிவித்தார். ஆனால் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்களில் அவர் தோல்வி அடைந்தார். ஆனால் இதை சிறிசேனா ஏற்க மறுத்ததுடன், ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக மீண்டும் நியமிக்கமாட்டேன் எனவும் மறுத்து ...

Read More »