Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் (page 10)

உலகச்செய்திகள்

Rajapaksa-to-act-as-PM-Ban--Sri-Lanka-Supreme-Court-ordered

பிரதமராக செயல்பட ராஜபக்சேவுக்கு தடை – இலங்கை சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

கொழும்பு, இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அந்த நாட்டில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட வழிவகுத்துவிட்டது. ரனில் விக்ரமசிங்கே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய அதிபர் சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ந் தேதி அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், தான் தொடர்ந்து பிரதமராக நீடிப்பதாக ரனில் விக்ரமசிங்கே கூறினார். இதனால் யார் பிரதமர் என்பதில் அரசியல் சட்டசிக்கல் ...

Read More »
Pakistan-and-China-began-joint-combat-training--The-air

பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது – இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் யார் ஆட்சி நடைபெற்றாலும், ஆட்சிகள் மாறினாலும், அவர்களின் நட்புறவு பாதிப்பதில்லை. இரு தரப்பு ராணுவ உறவும் வலுவாக உள்ளது. அது மட்டுமின்றி இரு நாடுகள் இடையே பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பும் மிக ஆழமாக உள்ளது. மேலும், புதிதாக சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்ற உள்கட்டமைப்பு திட்டம் நிறைவேற்றப்படுகிறது. சி.பி.இ.சி. என்னும் இந்த சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிவீதம் ...

Read More »
Dalpeans-should-help-come-to-peace-talks--US-President

“தலீபான்கள் சமாதான பேச்சுக்கு வர உதவவேண்டும்” – இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உங்கள்(இம்ரான்கான்) பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். எனவே தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு அபோதாபாத் நகரில் ...

Read More »
The-founder-of-Playboy-charity-magazine-Vayakara-ring

‘பிளேபாய்’ கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில் விற்பனை

லாஸ் ஏஞ்சல்ஸ், உலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள். இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:- ...

Read More »
Zimbabwe-Sugarcane-truck-collision-with-private-bus--12

ஜிம்பாப்வே: தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதல் – 12 பேர் பலி

ஹராரே, ஜிம்பாப்வே நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜிம்பாப்வேயில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற மூன்றாவது பெரிய ...

Read More »
Over-40-million-people-still-trapped-in-slavery-ILO

உலக அளவில் அடிமை தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 கோடி; அதிர்ச்சி தகவல்

ஐ.நா. சபை, உலக அளவில் அடிமை தொழிலில் 4 கோடி பேர் ஈடுபடுகின்றனர் என்றும் அவர்களில் 4ல் ஒரு பங்கினர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்த உலகளாவிய விவகாரத்தில் மனித கடத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர், கட்டாய திருமணம் மற்றும் ஆயுத போரில் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சேர்த்து பணியில் அமர்த்துதல் போன்றவை உள்ளன. இந்த அடிமை தொழில் சார்ந்த விசயங்களை ஒழிப்பதற்கான பிரசாரத்தில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் ...

Read More »