Templates by BIGtheme NET

உலகச்செய்திகள்

Trump-order-Court-prohibition

6 நாட்டு மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட்டு தடை

வாஷிங்டன், வெனிசுலாவை சேர்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தடை விதித்தார். இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. இதனிடையே, பிற நாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று கூறி ஹவாய் மாகாண அரசு உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி டெர்ரிக் வாட்சன், ஜனாதிபதி டிரம்பின் இந்த கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதுபற்றி நீதிபதி ...

Read More »
3-Killed-In-Shooting-At-Business-Park-In-Maryland-Hunt-On

அமெரிக்காவின் மர்யலான்ட் பகுதியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்

மர்யலாண்ட், அமெரிக்காவின் மர்யலான்ட் மாகாணத்தில் உள்ள வணிக பூங்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர். மர்யலாண்ட் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹார்போர்டு கவுண்டி என்ற இடத்தில் எம்மோர்டன் என்ற பெயரில் வணிக பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் பலியாகியுனர். 2 பேர் காயம் அடைந்தனர். குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சீரற்ற முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் ...

Read More »
SUV-vehicle-rammed-into-people-killing-5-and-injuring-6-in

உக்ரைன்: சாலையோரம் நடந்துசென்ற மக்கள் கூட்டத்தில் கார் மோதி 5 பேர் பலி

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திடையே காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் கார்கிவ். இங்கு நேற்று இரவு சாலையோரமாக பொதுமக்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் சாலையோரமாக நடந்து சென்ற மக்கள் மீது திடீரென வேகமாக மோதியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் ...

Read More »
Malala-Yousafzai-Trolled-For-Wearing-Jeans-In-Viral-Pic

ஜீன்ஸ், ஹீல்ஸ் அணிந்து கொண்டு மலாலா சென்றாரா? சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

இஸ்லமாபாத், பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே போராடியவர் மலாலா யூசுப்சாய், 2012-ஆம் ஆண்டு பெண் கல்விக்காகப் போராடிக்கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். பின் உயிர் பிழைத்த மலாலா பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மலாலா யூசுப்சாய் போன்ற உருவம் கொண்ட ஒரு இளம் பெண், ஜீன்ஸ், மற்றும் ஹீல்ஸ் அணிந்து கொண்டு செல்வது போன்ற புகைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஊடகங்களில் ...

Read More »
Kill-her-husband-The-girl-is-sentenced-to-death

ஆசிட் ஊற்றி கணவரை கொன்ற பெண்னுக்கு மரண தண்டனை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள முல்தான் பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண் இரண்டாவது திருமணம் செய்ததால் கணவர் மீது கொண்ட ஆத்திரத்தில் அவர் உறங்கி கொண்டிருந்தபோது அவர்மீது ஆசிட்டை வீசி கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யாஸ்மின் மீது முல்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த கொடூர வழக்கில் குற்றவாளி யாஸ்மினுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய மரண தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மாலிக் காலிக் மஹ்மூத் நேற்று ...

Read More »
US-threats-of-war-with-North-Korea-dangerous-says-Hillary

வட கொரியாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது: ஹிலாரி கிளிண்டன்

சியோல்: ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 3-ந்தேதி வடகொரியா நடத்திய 6-வது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையும், ஜப்பானுக்கு மேலே ஏவுகணை பறக்க விட்ட சம்பவமும் சமீப காலமாக அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வடகொரியாவின் இத்தகையை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடற்படை பயிற்சியை தொடங்கி உள்ளது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு மற்றும் ...

Read More »