Home » இந்தியா செய்திகள் (page 5)

இந்தியா செய்திகள்

Iraqi-national-held-for-throwing-two-puppies-from-8th-floor

அரியானாவில் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசிய ஈராக் நாட்டு வாலிபர் கைது

குர்காவன், அரியானாவின் குர்காவன் பகுதியில் எமரால்டு எஸ்டேட் பகுதியில் 8 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசி எறிந்துள்ளார். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சைப் அசார் அப்துல் உசைன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் வெளிநாடுகளில் இருந்து குர்காவன் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நபர்களுக்கு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரிடம் ...

Read More »
5-senior-citizens-die-due-to-severe-heatwave-in-Jhansi--Sad

உத்தரபிரதேசத்தில் இருந்து ரெயிலில் திரும்பிய போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் வெயிலுக்கு பலி – உருக்கமான தகவல்கள்

லக்னோ, தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கடும் வெயில் காரணமாக பரிதாபமாக இறந்த இந்த சம்பவம் குறித்த உருக்கமான தகவல்கள் வருமாறு:- கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட தமிழகத்தில் இருந்து 68 பேர் வடமாநிலங்களுக்கு 3-ந் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். அவர்கள், கயா, திருவேணி சங்கமம், காசி, ஆக்ரா, வாரணாசி ஆகிய பகுதிகளில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் முதியவர்கள் ஆவார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி ...

Read More »
8-days-ago-is-missinga-Discovering-the-parts-of-the-Air

8 நாட்களுக்கு முன்பு மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு – பயணம் செய்தவர்கள் கதி என்ன?

புதுடெல்லி, 13 பேருடன் 8 நாட்களுக்கு முன்பு மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாசலபிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் கதி என்ன ஆனது என்பதை கண்டறிய முயற்சிகள் நடக்கின்றன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் ஒன்று, கடந்த 3-ந் தேதி மதியம் 12.27 மணிக்கு அசாம் மாநிலம், ஜோர்கட் விமானப்படை நிலையத்தில் இருந்து அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மென்சுகா விமானப்படை தளம் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில், 6 விமானப்படை அதிகாரிகள், 5 வீரர்கள் மற்றும் இருவரும் ...

Read More »
Odisha-Chief-minister-meeting-with-Modi-Demanded-for-Fani

மோடியுடன் ஒடிசா முதல்-மந்திரி சந்திப்பு: ‘பானி’ புயல் பாதிப்பால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் கடந்த 29-ந்தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில் அவர் தலைநகர் டெல்லிக்கு நேற்று சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமரை பாராட்டினேன். சமீபத்திய பானி புயலால் பெரும்பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ...

Read More »
Farmers-were-dismissed-The-money-paid-to-the-farmers-is

விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம் மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா சாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா. விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக சகாபுரா டவுனில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயி சிவப்பாவின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து ரூ.43 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இந்த ...

Read More »
Indian-painting-at-the-London-Auction-Center-has-sold-a

லண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை

புதுடெல்லி, இந்திய ஓவியர் பூபன் காகர் வரைந்த ஓவியம் ரூ.22 கோடியே 39 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அவர் 1934-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். 2003-ம் ஆண்டு காலமானார். அவரது ஓவியங்கள் சர்வதேச புகழ் பெற்றவை. சுவிஸ் நாட்டை சேர்ந்த கய், ஹெலன் பார்பியர் ஆகியோர் சேகரித்து வைத்திருந்த காகர் உள்ளிட்ட இந்திய ஓவியர்களின் 29 ஓவியங்கள், லண்டனில் உள்ள சூத்பி ஏல நிறுவனத்தின் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டன. அவற்றில், காகர் 1982-ம் ஆண்டு வரைந்த ‘டூ மென் இன் பெனாரஸ்’ ...

Read More »