Home » இந்தியா செய்திகள் (page 4)

இந்தியா செய்திகள்

Rahul-Gandhi-to-continue-as-Congress-president--Make-sure

‘ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்’ – கட்சி மேலிடம் உறுதி

புதுடெல்லி, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் காரிய கமிட்டி கடந்த 25-ந் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமா முடிவை காரிய கமிட்டி ஒருமனதாக நிராகரித்தது. எனினும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில், ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ...

Read More »
Chandrayaan2-spacecraft-will-be-launched-on-July-15-ISRO

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ந் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

பெங்களூரு, நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தியது. இதன் தொடர்ச்சியாக, நிலவு தோன்றியது குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விண்கலத்தின் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் அதை ஏவுவதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரோ இறங்கி உள்ளது. தற்போது பெங்களூரு மாரத்தஹள்ளியில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருக்கும் சந்திரயான்-2 விண்கலம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டது. பின்னர் இந்த விண்கலம் ஏவும் திட்டம் குறித்து இஸ்ரோ ...

Read More »
Vayu-Storm-Warning-Around-3-lakh-people-are-shifting-to

‘வாயு’ புயல் எச்சரிக்கை: குஜராத்தில் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

புதுடெல்லி, அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கரையை கடக்கிறது. அப்போது 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் பாதிக்கும் 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 400 கிராமங்களை சேர்ந்த 2.91 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 36 கம்பெனி ...

Read More »
Do-not-work-as-at-home-the-office-should-come-to-the-right

வீட்டில் இருந்தவாறு பணி செய்யக்கூடாது: சரியான நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும் – மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் மந்திரிகளுக்கு பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, மந்திரிகள் அனைவரும் காலந்தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதன்படி அனைத்து மந்திரிகளும் ஒழுங்காக அலுவலகத்துக்கு வரவேண்டும் எனவும், அதுவும் சரியான நேரத்துக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் அலுவலகம் வந்தவுடன், புதிய பணிகள் குறித்து அமைச்சக அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வீட்டில் இருந்து பணி செய்வதை தவிர்க்க வேண்டும் ...

Read More »
Amitabh-Bachchan-Pays-Off-Outstanding-Loans-of-2100-Farmers

2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்

மும்பை, நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மீது இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பரிவு காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் 1,398 பேருக்கும், மராட்டியத்தை சேர்ந்த விவசாயிகள் 350 பேருக்கும் பயிர்க்கடனை செலுத்தினார். தற்போது அவர் பீகாரை சேர்ந்த 2 ஆயிரத்து 100 விவசாயிகளுக்கான பயிர்க்கடனை செலுத்தி உள்ளார். இவர்கள் வங்கியில் இருந்து பயிர்க்கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்கள். இவர்களில் சில விவசாயிகளை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து மகள் சுவேதா, மகன் அபிஷேக் பச்சன் கையினால் பயிர்க்கடனுக்கான ...

Read More »
1-crore-of-old-banknotes-seized-in-Marathi

மராட்டியத்தில் 1¼ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

மும்பை, மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கவத் யாமல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் கத்தை கத்தையாக தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதில் மொத்தம் ரூ.1¼ கோடி இருந்தது. இதையடுத்து காரில் இருந்த கணேஷ் கோல்கர், சமதான் நரே, அமோல் தாஸ்குட் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More »