Templates by BIGtheme NET

இந்தியா செய்திகள்

If-you-give-information-about-black-money-the-Rs-5-crore

கருப்பு பணம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.5 கோடி பரிசு – மத்திய அரசு திட்டம் பற்றி புதிய தகவல்கள்

புதுடெல்லி, வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத்தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஜூன் 1-ந் தேதி, ரூ.5 கோடிவரை உயர்த்தியது. அதுபோல், பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடிவரை பரிசு வழங்கப்படும். அதற்காக ஒருவரே 2 திட்டங்களின் கீழ், மொத்தம் ரூ.6 ...

Read More »
Shepherd-injured-trying-to-save-his-goats-and-sheep-from

ஆடுகளை பாதுகாக்க சிங்கங்களுடன் சண்டை போட்ட தொழிலாளி

ஆமதாபாத்: குஜராத்தில் புகழ்பெற்ற கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. ஆசிய சிங்கங்களின் சரணாலயமாக விளங்கும் இந்த பூங்காவின் ஒரு பகுதி அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பூங்காவின் எல்லையோரம் அமைந்துள்ள அம்பார்டி கிராமத்தை சேர்ந்த பவேஷ் பர்வாட் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி, தனது ஆடுகளை அருகில் உள்ள மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். இவர் மலையை நெருங்கியதும், அங்கே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த 2 சிங்கங்கள் திடீரென வெளியே வந்து ஆடுகளை வேட்டையாட முயன்றன. இதை எதிர்பாராத பவேஷ் பர்வாட், அந்த ...

Read More »
case-against-the-neutrino-research-center-National-Green

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இந்தநிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், டாடா நிறுவனம் நியூட்ரினோ ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல்துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை ...

Read More »
5-killed-in-fire-in-Himachal--Wedding-at-home-is-sad

இமாசலபிரதேசத்தில் 5 பேர் தீயில் கருகி பலி – திருமண வீட்டில் சோகம்

சிம்லா, இமாசலபிரதேச மாநிலம் மாண்டி மாவட்டத்தில் உள்ள நெர்சவுக் என்னும் கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மணமகன் ஊர்வலம் நடந்த பிறகு மணமகள், மணமகன் வீட்டார் ஒரு வீட்டில் தனித்தனி அறைகளில் இரவில் தங்கினர். நேற்று காலை திருமணம் நடக்க இருந்தநிலையில் அதிகாலை 5 மணி அளவில் இரு வீட்டாரும் தங்கியிருந்த அறையில் மின்சார கோளாறு காரணமாக தீப்பற்றிக் கொண்டது. இந்த தீ சமையல் அறைக்கும் பரவியதால் அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் சமையல் ...

Read More »
Rape-a-girl-under-the-age-of-12-Lifting--Legislative-Bill

12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கற்பழித்தால் தூக்குத்தண்டனை – நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல்

புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது. இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் உனாவ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்தது. இந்த நிலையில் 12 வயது மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளையும், பெண்களை தனியாகவும், கூட்டாகவும் பாலியல் ...

Read More »
Detained-in-the-rape-case-the-church-father-is-bailed-out

கற்பழிப்பு வழக்கில் கைதான பாதிரியாருக்கு ஜாமீன் – ஐகோர்ட்டு உத்தரவு

கொச்சி, கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம் கொளஞ்சேரி என்ற இடத்தில், பாவமன்னிப்பு கோர வந்த பெண்ணை கற்பழித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் 4 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் கடந்த 13-ந் தேதி கைதான ஜான்சன் மேத்யூ என்ற பாதிரியாருக்கு திருவள்ளாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள கேரள ஐகோர்ட்டில், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.