Home » இந்தியா செய்திகள் (page 3)

இந்தியா செய்திகள்

Jammu-amp-Kashmir-Exchange-of-fire-between-terrorists

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா அருகில் உள்ள ப்ரா பண்டினா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »
Amith-Shah-says-that-BJP-does-not-touch-the-peak-of-success

பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை : அமித் ஷா சொல்கிறார்

புதுடெல்லி, மாநில பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு, நிர்வாகிகளிடையே பேசினார். அப்போது அவர், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இருந்தாலும், பா.ஜனதா தனது வெற்றியின் உச்சத்தை இன்னும் தொடவில்லை. கட்சியின் அங்கமாக இல்லாத, கட்சியின் நலத்திட்டங்களை அனுபவிக்காத அனைத்து தரப்பு மக்களையும் எட்டும்வகையில் பா.ஜனதாவினர் இன்னும் கடுமையாக பணியாற்ற வேண்டும்’’ என்று பேசினார். பா.ஜனதா புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை அமித் ...

Read More »
Petrol-diesel-prices-drop-on-friday-Check-todays-rates

பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைவு

சென்னை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 18 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.72.90 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 17 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.67.88 காசுகளாகவும் உள்ளது.

Read More »
Supreme-Court-to-hear-students-plea-on-NEET-questions

நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை

புதுடெல்லி, இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையாமல், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க ...

Read More »
Terror-in-Uttar-Pradesh-Head-of-the-Bar-Council-shot-dead

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை

ஆக்ரா, உத்தரபிரதேச பார் கவுன்சில் தலைவராக தர்வேஷ் யாதவ் என்ற பெண் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். நேற்று மாலை இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வக்கீல் அரவிந்த்குமார் மிஸ்ரா அறையில் மூத்த வக்கீல் மனீஷ் சர்மா என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வக்கீல் மனீஷ் சர்மா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பார் கவுன்சில் தலைவரான தர்வேஷ்யாதவை சரமாரியாக சுட்டார். இதில் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மனிஷ்சர்மா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் காயம் ...

Read More »
Cyclone-Vayu-wont-hit-Gujarat--IMD

வாயு புயலால் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது; இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று காலை கரையை கடக்கிறது. அப்போது 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் பாதிக்கும் 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 400 கிராமங்களை சேர்ந்த 2.91 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 36 கம்பெனி தயார் நிலையில் ...

Read More »