Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் (page 20)

இந்தியா செய்திகள்

Tamil-Nadu-Andhra-Pradesh-GST-Extension-of-time-period-for

தமிழ்நாடு, ஆந்திராவில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, தேனி, தஞ்சை, சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் வணிகம் செய்பவர்கள், அக்டோபர் மாதத்துக்குரிய ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, டிசம்பர் 20–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், ‘தித்லி’ புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வியாபாரம் செய்பவர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

Read More »
The-Central-Government-has-suddenly-approached-the-Karnataka

காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீர் ஒப்புதல்

புதுடெல்லி, கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆறு ஓடும் வழியில் மேகதாது என்னும் பகுதி உள்ளது. இங்கு, காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு சித்தராமையா தலைமையிலான முந்தைய கர்நாடக அரசு 2013-ம் ஆண்டு முடிவு செய்தது. பின்னர், ரூ.5,912 கோடி செலவில் அணை கட்டுவதற்கு வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து அதற்கு அனுமதியும் கோரியது. கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு மறைந்த, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ...

Read More »
Sterlite-plant-case-The-Green-Tribunal-Today-is-the-judgment

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட ...

Read More »
Cash-value-loss-action--A-good-result-Commenting-on-Reserve

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நல்லதொரு முடிவு : ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கருத்து

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி இரவு, நாட்டு மக்களுக்கு டெலிவி‌ஷனில் உரை ஆற்றியபோது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் அன்று இரவு முதல் செல்லாது என அவர் அறிவித்தது, கருப்பு பண முதலைகள் முதல் சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மாற்றுவதற்கு வங்கிகளில், ஏ.டி.எம். மையங்களில் மக்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பண மதிப்பிழப்பு ...

Read More »
Priority-in-government-job-opportunities-for-those-who-are

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை : அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுடெல்லி, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், 9–வது இந்திய உறுப்பு தான நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் முதலிடத்துக்கான விருது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரிகள் அஷ்வின்குமார் சவுவே மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோரிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார். பின்னர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ...

Read More »
11-MLAs-including-O-Panneerselvam-are-postponed-to

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க. அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், கே.பாண்டியராஜன், ஆர்.நடராஜ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதேபோன்று, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். இந்த வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. இதில் ...

Read More »