Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் (page 2)

இந்தியா செய்திகள்

Gujarat-woman-delivers-baby-after-getting-womb-from-mother

மாற்று அறுவை சிகிச்சை மூலம் தாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள்

குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார். மூன்று முறை கருச்சிதைவு, மேலும் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்கியுள்ளார். கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மீனாட்சி உடல்நிலை சற்று தேறிய பிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது. ...

Read More »
Woman-journalist-begins-climbing-Sabarimala-hill

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் சபரிமலை பயணம்; அய்யப்ப பக்தர்கள் முழக்கம்

பம்பை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது. கோவிலுக்கு செல்ல முயற்சி செய்யும் பெண்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீஸ் தெரிவித்தது. இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் கோவிலுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டு உள்ளார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர். சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் இருவரும் ...

Read More »
The-shocking-police-are-investigating-the-cellphone-instead

ஆன்-லைனில் முன்பதிவு செய்தவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் வந்ததால் அதிர்ச்சி போலீசார் விசாரணை

அவுரங்காபாத், அவுரங்காபாத்தை சேர்ந்த கஜானன் காரத் என்பவர் செல்போன் வாங்குவதற்காக பிரபலமான ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த 9-ந் தேதி முன்பதிவு செய்தார். இதற்கான தொகை ரூ.9,134-ம் ஆன்-லைன் மூலமாகவே செலுத்தினார். அந்த ஆன்-லைன் நிறுவனத்திடம் இருந்து கஜானன் காரத்துக்கு கடந்த 14-ந் தேதி ‘பார்சல்’ ஒன்று வந்தது. அதை திறந்து பார்த்தபோது அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அதற்குள் செல்போனுக்கு பதிலாக செங்கல் துண்டு ஒன்று இருந்தது. உடனே அவர், தனக்கு ‘பார்சல்’ கொண்டு வந்த கூரியர் நிறுவனத்தை தொடர்புகொண்டு ...

Read More »
Preparation-of-the-parliamentary-election-report

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி: ப.சிதம்பரம் 27-ந் தேதி மும்பை வருகிறார்

மும்பை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு முக்கிய துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 27-ந் தேதி ப.சிதம்பரம் தலைமையிலான குழு மும்பைக்கு வர உள்ளது. இந்த குழுவினர் இங்குள்ள தொழில் துறை, வர்த்தகத்துறை, வங்கித்துறை மற்றும் முதலீட்டாளர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து ...

Read More »
16000-Thousand-Letters-in-Tirupati

திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு

சென்னை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை விற்றதில் முறைக்கேடு நடந்துள்ளது. பிரம்மோற்சவத்தின் 5-வது நாளான கடந்த 14-ம் தேதி கருட சேவையன்று லட்டுகளை விற்றதில் ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளது தெரியவந்தது. டிக்கெட் ஸ்கேனர் வேலை செய்யவில்லை எனக்கூறி பக்தர்களின் லட்டுகளை முறைகேடாக விற்றது தெரியவந்தது. இதனையடுத்து, ஒப்பந்த ஊழியர்களின் லட்டு முறைகேடு தொடர்பாக தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More »
Gujarat-Effigy-of-Ravan-burnt-in-Ahmedabad-Vijayadashami

வட மாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாட்டம்: ராவணன் உருவ பொம்மை எரிப்பு

புதுடெல்லி, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முப்பெரும் தேவியை வணங்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதம் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. குஜராத், மராட்டிய உள்ளிட்ட மாநிலங்களில் 9 நாட்களுக்கு இவ்விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுகிறது. இந்தநிலையில், குஜராத்தில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. தீமை ஒழிந்து நன்மை செழிக்கும் என்பதை குறிக்கும் வகையில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

Read More »