Home » இந்தியா செய்திகள் (page 1410)

இந்தியா செய்திகள்

மும்பையில் பணமோசடி செய்ததாக தமிழ் சினிமா இயக்குனர் உள்பட 3 பேர் கைது

மும்பை, மும்பையில் பணமோசடி செய்ததாக தமிழ் சினிமா இயக்குனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இயக்குனர் பி.ரவிக்குமார் தமிழில் வெளியான ‘உண்மை’ திரைப்படத்தை இயக்கி நடித்தவர் பி.ரவிக்குமார். பட தயாரிப்பாளரும் ஆவார். சென்னையை சேர்ந்த பி.ரவிக்குமார் கடந்த ஆண்டு மும்பை தாராவிக்கு வந்திருந்தார். அவர் தயாரிக்கும் ஒரு படத்திற்கு அதிக நிதி தேவைப்பட்டுள்ளது. அப்போது தாராவியை சேர்ந்த பாலாஜி பொன்ராஜ்(வயது29) என்பவரிடம் கடன் கேட்டார். அவர் ரூ.6 லட்சத்தை எடுத்துக்கொண்டு தாராவியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த வி.ரவிக்குமார் மற்றும் அவரது ...

Read More »

பாஜக வேட்பாளரான தனது அம்மாவுக்கு எதிராக வாக்களித்த மகன்

ஆலப்புழா: கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவரின் மகன் அவருக்கு எதிராக வாக்களித்தது குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவித்தது வைரலாகி உள்ளது. கேரளாவில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி முன்னணி அமோக வெற்றி பெற்றது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்தது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் பஞ்சாயத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜகதம்மா வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். சிபிஐ வேட்பாளர் 359 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜகதம்மா 353 வாக்குகள் பெற்று மூன்றாவது ...

Read More »

இறந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கு அதிசய கிராமம்

சஹரன்பூர்: உத்ரகாண்ட்டில் இறந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் ஒரு அதிசய கிராமம் அமைந்துள்ளது பெரும் வியப்பினை ஏற்படுத்தி வருகின்றது. உத்தரகாண்ட் மாநிலம் சஹரன்பூரில் ஒரு கிராமத்தில் பெற்றோர்கள் தங்கள் இறந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இங்குள்ள மிர்பூர் அருகேயுள்ள மோகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமேஷ்வர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது 8 வயது மகள் இறந்து விட்டார். இறந்த மகளுக்கு திருமணம்: இந்நிலையில் இறந்த மகளின் திருமணத்தை சமீபத்தில் ராமேஷ்வர் வெகு விமரிசையாக நடத்தினார். இதில் நூற்றுக்கும் ...

Read More »

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் மருந்து – டிசம்பர் முதல் கொல்கத்தாவில் அறிமுகம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் முதன்முறையாக எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்து வருகிற டிசம்பர் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள சோனாகச்சி பகுதியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபசார அழகிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகளில் இதுவும் ஒன்று என வர்ணிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் இருந்து அந்நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கும் பொருட்டு எய்ட்ஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய சுகாதார ...

Read More »

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டம்: பதக்கங்களை திருப்பி அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்

மத்திய அரசின் விருதுகளையும், அங்கீகாரங்களையும் திருப்பி அளிக்கும் தற்காலத்திய போக்கை அடியொட்டி ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தில் கோரிக்கையை முழுமையாக ஏற்காத மத்திய அரசை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பெற்ற பதக்கங்களை திருப்பி அளித்தனர். போருக்காக பெற்ற பதக்கங்கள் மற்றும் பிறவற்றை அங்கீகரித்து வழங்கிய பதக்கங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் சண்டிகர் அருகே பஞ்சகுலாவில் உதவி ஆணையரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதே போல் ஜலந்தர், அமிர்தசரஸ், பாடியாலா, ரோஹ்டக், ஹிசார், அம்பாலா ஆகிய இடங்களிலும் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் ...

Read More »

பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் நாயகன் லாலு

பிஹாரின் தலைநகரான பாட்னாவில், 1970-ம் ஆண்டு ஒரு முக்கிய அரசியல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில், ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெர்னாண்டஸ் உட்பட காங்கிரஸ் அரசுக்கு எதிரான பல தலைவர்கள் கூடியிருக்க, பிஹாரின் அப்போதைய முதல்வர் கற்பூரி தாக்கூரும் அங்கு இருந்தார். அப்போது அவர், ஒரு மூலையில் கைகட்டி நின்று கொண்டிருந்த இளைஞனை பார்த்து, “இவன் எதிர்காலத்தில் பெரிய தலைவனாக வருவான். அந்த அளவுக்கு அவனிடம் பேச்சுத் திறமை இருக்கிறது” என்று குறிப்பிட்டு அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினார். இவருடைய வாக்கு பலிக்கும்படி நடந்து கொண்டிருக்கும் ...

Read More »