Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் (page 1313)

இந்தியா செய்திகள்

உடைகிறது ஆம் ஆத்மி – கெஜ்ரிவாலை நீக்க முயற்சி: டெல்லியில் பரபரப்பு

டெல்லி: தனிநபர் ஒருவரைச் சுற்றியே கட்சி வளர்கிறதோ என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய விவகாரம் வெடித்த பின்னணியில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சிகள் நடப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கட்சி உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அங்கு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. முதல் முறை சொதப்பினாலும் கூட அதை மறந்து, ...

Read More »

கேட்பாரற்று கிடக்கும் பி.எப். பணத்தில் முதியவர்களுக்கான புதிய பென்சன் திட்டம்!

டெல்லி : முதியோருக்கு பென்சன் வழங்க ‘அடல் பென்சன் திட்டம்’ உருவாக்கப்படும் என்றும் அதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும் என்றும் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். இதில், முதியவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அதன்படி, முதியவர்களுக்கு பென்சன் வழங்க முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் புதிய பென்சன் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ‘அடல் ...

Read More »

2015-2016-ம் நிதி ஆண்டில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலை பணிகள் தொடங்கப்படும்: பாராளுமன்றத்தில் தகவல்

புதுடெல்லி, பிப்.27- 2015-2016-ம் நிதி ஆண்டில், கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலை பணிகள் தொடங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில், ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதலாவது அணு உலை, சமீபத்தில் உற்பத்தியை தொடங்கியது. ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது அணு உலை, மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அங்கு 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் திட்டம் 2015-2016-ம் நிதி ஆண்டில் ...

Read More »

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், பிப். 25– காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் ஹெப் ஷெர்மல் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ராணுவ வீரர்களும், போலீசாரும் அங்கு சென்று தீவிரவாதிகளை தேடினர். மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டதில் 2 தீவிரவாதிகள் ...

Read More »

குஜராத்தில் 237 பேர் பலி: பன்றிக்காய்ச்சலை தடுக்க 144 தடை உத்தரவு

அகமதாபாத், பிப்.25– பன்றிக்காய்ச்சல் நோய் நாடு முழுவதும் பரவி உள்ளது. குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலால் நாடு முழுவதும் இதுவரை 875 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். குஜராத்தில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அம்மாநில மந்திரி ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் சபாநாயகருக்கு இந்த நோய் அறிகுறி இருக்கிறது. அங்கு இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 231 பேர் பலியாகி ...

Read More »

மதமாற்றம் செய்வதுதான் அன்னை தெரசாவின் முக்கிய நோக்கம்! – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

அல்வார்: அன்னை தெரசாவின் பிரதான நோக்கம் மதமாற்றம் செய்வதுதான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தன்னலமற்ற புனிதர் என்று போற்றப்படும் அன்னை தெரசா பற்றி இப்படி ஒரு கருத்தை முன்வைத்திருப்பது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் கிராமத்தில் தொண்டு நிறுவன விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதன் செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார். அப்போது, “தன்னலமற்ற நோக்கத்துடன் கொண்ட ஒரு செயலை செய்வது நல்லது. ஆனால் அன்னை தெரசாவின் செயல்பாடு, சேவை என்ற பெயரில் ...

Read More »