Templates by BIGtheme NET

இந்தியா செய்திகள்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதியை காரில் பின்தொடர்ந்து படம் பிடித்த வாலிபர் கைது!

பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதியை காரில் தொடர்ந்து சென்று வீடியோ பிடித்த நபரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக ஹைகோர்ட்டில் நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி சந்திரசேகரா, ஊழல் என்பது மனித உரிமைக்கு எதிரான செயல் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தை குறிப்பிட்டு ...

Read More »

ஏர்செல் வழக்கு:தயாநிதி மாறன் குடும்பத்தின் ரூ742 கோடி சொத்துகளை பறிமுதல் செய்கிறது அமலாக்கப் பிரிவு

டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்தின் ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்துக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு அதன் பங்குகளை விற்க செய்தார். அதனைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை தயாநிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ...

Read More »

சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது ஜெயலலிதா ஜாமீன் மனு!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன், ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் ...

Read More »

அவதூறு வழக்கில் வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அரசுக்கும், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இதில் அரசுத்தரப்பு சாட்சிகள் வராததால் அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரைப் பயன்படுத்தி, மதிமுகவை உடைக்க திமுக தலைவர் கருணாநிதி திட்டமிடுவதாக கடந்த 2006 – ம் ஆண்டு வைகோ குற்றம்சாட்டியிருந்தார்இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கும் ...

Read More »

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, பொருளாதார வளம் பெறுவதற்காக குழந்தைகள் எவ்வாறு வதைக்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். தலிபான்களால் தாக்கப்பட்ட பின்பும், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறுபடாமல் பெண் குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டு வரும் மலாலா யூசுப்சாய்க்கு இந்த விருது வழங்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 17 ...

Read More »

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்

பர்த்வான், மேற்கு வங்காளம் மாநிலம் பர்த்வான் மாவட்டம் துர்காபூர் டவுனில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் 12 வயது சிறுமி, அக்கட்சியின் தலைவர் பாபு மொண்டாலின் சகோதரர் போலாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி சுனில் யாதவ் கூறுகையில், சிறுமி சிட்டி சென்டர் பகுதியில் தனது உறவினர்களுக்காக காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த போலா சிறுமியின் வாயை மூடி, அருகே இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு தூக்கி சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்று ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.