Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் (page 10)

இந்தியா செய்திகள்

Sexual-Complaint-Rahul-Gandhi-supports-Me-Too

அடுக்கடுக்கான பாலியல் புகார்: ‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

புதுடெல்லி, பணித்தலங்களிலும், பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சர்வதேச அளவில் ‘மீ டூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன. இதில் சினிமாத்துறையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் ‘மீ டூ’ என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து வருகின்றனர். எனினும் அரசியல் துறையையும் இது விட்டு வைக்கவில்லை. அந்தவகையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த ...

Read More »
Tiruparankundam-Thiruvarur-The-reason-for-postponing-the

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம், அழுத்தங்கள் அல்ல – தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

புதுடெல்லி, தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதே போன்று திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொகுதிகளில் ...

Read More »
Global-internet-shutdown-likely-over-next-48-hours-for

பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்!

இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 48 மணி நேரங்களில் ‘டொமைன் சர்வர்கள்’ மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பு வசதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டிஎன்எஸ்-ஐ (டொமைன் நேம் சிஸ்டம்) பாதுகாக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் பணியை ஐசிஏஎன்என் மேற்கொள்ள உள்ளது. ‘சைபர் அட்டாக்’ அதிகமாகி வரும் நிலையில் பராமரிப்பு பணி அவசியமானது என்று ஐசிஏஎன்என் கூறியுள்ளது. தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சிஆர்ஏ ...

Read More »
1_bride._L_styvpf

லஞ்சம் வாங்குவதில் தமிழகம் 3வது இடம்- கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள் தவிர 15 மாநிலங்களில் மட்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்தியாவில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் சொத்துப்பதிவு, வரித்துறை, போக்குவரத்து, மின்சாரத்துறை போன்றவைகளில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் ...

Read More »
AIADMK-Election-to-the-post-of-general-secretaryIn-the

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் தேர்தல் கமிஷனில், சசிகலா தரப்பு மனு

புதுடெல்லி, அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி எம்.பி. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் எழுத்துப்பூர்வ வாதங்களை மனுவாக தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து நேற்று சசிகலா தரப்பு சார்பில் வக்கீல் ராஜா ...

Read More »
Girl-denied-treatment-in-Delhi-govt-hospital-over-Aadhaar

டெல்லி அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டை இல்லாத சிறுமிக்கு சிகிச்சை மறுப்பு

புதுடெல்லி, உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரை சேர்ந்த சிறுமி பிரியா (வயது 9) டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் சிறுமியிடம் டெல்லியில் இருப்பதற்கான ஆதார் அட்டை இல்லை. இதனால் சிறுமிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து டெல்லி பாரதீய ஜனதா தலைவர் மனோஜ் திவாரி, மத்திய மந்திரி நட்டாவை குறிப்பிட்டு டுவிட்டரில் தகவல் பதிவிட்டு உள்ளார். இந்த சிறுமிக்கு சிகிச்சை கிடைப்பது தவிர்த்து நவராத்திரிக்கு வேறு எந்த சிறந்த விசயமும் கிடையாது என்றும் அதில் தெரிவித்து உள்ளார். இதன்பின் ...

Read More »