Templates by BIGtheme NET

இந்தியா செய்திகள்

bus-fares-increased-in-Pondicherry

புதுவையில் பஸ் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

புதுச்சேரி: டீசல், வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு, டிரைவர்கள்- கண்டக்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு காரணங்களால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று புதுவை தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். புதுவையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் பஸ் உரிமையாளர்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று புதுவையில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவை யூனியன் பிரதேசத்துக்குள் இயக்கப்படும் ...

Read More »
Grand-Diwali-celebrations-in-Ayodhya-almost-2-lakh-diyas

உத்தரப்பிரதேசம்: அரசு சார்பில் தீபாவளி கோலாகலம் – தீப ஒளியில் ஜொலித்த சரயு நதி

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சரயு நதிக்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். பெண்களை பாதுகாக்க ஆன்டி ரோமியோ படை, அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு என இவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே, மாநில அரசு சார்பில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என யோகி ...

Read More »
Separate-Police-Investigation-Wing-For-Women-To-Start-In

பெண்களுக்கு எதிராக குற்றங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: மராட்டிய அரசு முடிவு

மும்பை: மராட்டியத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. கற்பழிப்பு, மானபங்கம், குடும்ப வன்முறை, தற்கொலைக்கு தூண்டப்படுதல் போன்ற பல வழக்குகளில், பெண்களிடம் விசாரணை மேற்கொள்வதில் ஆண் போலீஸ் அதிகாரிகளுக்கு சங்கடம் ஏற்படுகிறது. மேலும் பெண்கள் அவர்களிடம் வெளிப்படையாக பிரச்சினைகளை கூற தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வழக்குகளை முடிப்பத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் எளிதில் தீர்வு காண்பதற்கும், பெண்களின் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்கும் ஏற்ற வகையில் புலனாய்வு குழு அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மாவட்டந்தோறும் 16 பேர் கொண்ட ...

Read More »
Thiruvalluvar-statue-in-Mumbai-Union-Minister-inaugurated

மும்பையில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை – மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே திறந்து வைத்தார்

மும்பை: மும்பை தமிழ் தொழில் வர்த்தக சபை, நேஷனல் எஜூகேசன் சொசைட்டி மற்றும் சரஸ்வதி வித்யா பவன் குழுமங்களின் நிறுவன தலைவர் ஆர்.வரதராஜன் மும்பையில் முதல் முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதற்காக 11 அடி கொண்ட திருவள்ளுவரின் முழு உருவச்சிலை கன்னியாகுமரியில் உருவாக்கப்பட்டு மும்பை கொண்டு வரப்பட்டு, முல்லுண்டு கிழக்கு மகாடா காலனியில் உள்ள கிழக்கு விரைவு சாலையில் நிறுவப்பட்டது. திருவள்ளுவரின் இந்த சிலை ஓலைச்சுவடியை கையில் ஏந்தி நிமிர்ந்து நின்று கம்பீரமாக காட்சி அளிக்கும் ...

Read More »
Odisha-flames-The-victims-are-financed-by-the-family

ஒடிசா வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல் மந்திரி நவீன் பட்நாயக்

புவனேஸ்வர், ஒடிசா மாநிலத்தில் பலசோர் மாவட்டத்தில் உள்ள குன்டச்சக்கா கிராமத்தில் வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து வந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும். மேலும், வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

Read More »
Earthquake-with-magnitude-47-hit-Jammu-and-Kashmir-at-640

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. காலை 6.40 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Read More »