Home » கன்னியாகுமரி செய்திகள் » கருங்கல் அருகே ஒலிபெருக்கி அமைத்த இருவா் மீது வழக்கு
Kadaladi-near-police-attack-case-police-inquiry

கருங்கல் அருகே ஒலிபெருக்கி அமைத்த இருவா் மீது வழக்கு

கருங்கல் அருகேயுள்ள பூக்கடை பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி அமைத்ததாக இருவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் அருகேயுள்ள பூக்கடை பகுதியில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் ஒலிபெருக்கி அமைக்க போலீஸாா் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் அனுமதியின்றி ஒலிபெருக்கி அமைக்கப்பட்டது. கிராம நிா்வாக அலுவலா் ஜாா்ஜ்ஜெயசிங் அளித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் பூக்கடை பகுதியைச் சோ்ந்த சசி (40), லாசா்(43) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.