பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » புதிய வர்த்தகம்.. சைக்கிள் அகர்பத்தி குறிவைக்கும் ரூ.20,000 கோடி சந்தை இலக்கு..!
cycle

புதிய வர்த்தகம்.. சைக்கிள் அகர்பத்தி குறிவைக்கும் ரூ.20,000 கோடி சந்தை இலக்கு..!

அட அகர்பத்தி வியாபாரம் என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது மற்ற பொருட்களை விடவும் மிகவும் கடினமான வர்த்தகம் ஆகச் சிறந்த ஒரு விநியோக தளம் இருந்தால் மட்டுமே இத்துறை விற்பனையில் வெற்றி அடையும். சரி அப்படிச் சைக்கிள் அகர்பத்தி-யை தயாரிக்கும் என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனத்தின் ஒரு வருடத்தின் வர்த்தகம் எவ்வளவு தெரியுமா..? என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனம் தற்போது அர்ஜூன் ரங்கா தலைமையில் வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் அளவிற்க அகர்பத்தி மற்றும் பிற ஆன்மீக பொருட்களை விற்பனை செய்து அசத்துகிறது. சொல்லப்போனால் இந்நிறுவனம் ஆன்மீக பொருட்கள் விற்பனையில் ஒரு சரித்திரத்தைப் படைத்துள்ளது என்றாலும் மிகையில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனம் தற்போது புதிய வர்த்தகத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அர்ஜூன் ரங்கா அவர்களின் தாத்தா என்.ரங்கா ராவ் 1948இல் முதல் முறையாக அகர்பத்தி தயாரித்து விற்பனை செய்யத் துவங்கினார். அதன் பின் தலைமுறை தலைமுறையாக இந்த வர்த்தகத்தை அவரது குடும்பம் செய்து வந்தது. அதன் பின்னர்ப் பாலிமர் சையின்ஸ் பிரிவில் பொறியியல் படிப்பு, அமெரிக்காவின் தன்டர்பேர்டு ஸ்கூல் ஆ பிஸ்னஸ் கல்லூரியில் MBA படித்து வர்த்தகத்தைக் கையில் எடுத்தார் அர்ஜூன் ரங்கா. இவரது தலைமையில் தான் என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனம் 1000 கோடி ரூபாய் வர்த்தகத்தை அடைந்தது.

இந்தியா மற்றும் உலக நாடுகளில் அகர்பத்தி விற்பனை செய்து வந்த என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஏர் பிரஷ்னர், கார் பிரஷ்னர் மற்றும் அரோமாதெரபி எண்ணெய் ஆகியவற்றைத் தயாரித்துச் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தப் புதிய தயாரிப்புகள் இந்நிறுவனத்தின் புதிய வர்த்தகப் பிரிவுக்கு வழிவகுத்ததுள்ளது மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் தான் என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனத்தில் மும்பையைத் தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் மோதிலால் ஆஸ்வால் என்கிற ஒரு தனியார் முதலீட்டு நிறுவனம் இந்நிறுவனம் குறிப்பிடாத தொகையை முதலீடு செய்தது. இந்த ரகசிய முதலீடு பல புதிய வர்த்தகப் பிரிவில் இறங்க என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிர்வாகத்திற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனம் தற்போது அகர்பத்தி விற்பனையைத் தாண்டி பூஜை சாமான்கள் பிரிவில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. இத்துறையில் மொத்த வர்த்தக மதிப்பு மட்டும் 15,000 – 20,000 கோடி ரூபாய், அதோடு இப்பிரிவில் பெரிய நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பதால் இது என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனத்திற்குப் பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இப்புதிய வர்த்தகத்தில் என்.ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனம் விளக்கு எண்ணெய், விளக்கு, கற்பூரம், மஞ்சள், குங்குமம், சந்தனம் பேஸ்ட், பருத்தி திரி, வரட்டி ஆகியவற்றையும் தயாரித்துச் சந்தைப்படுத்த உள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாகத் தற்போது குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் பூஜை கிட்-ஆகவும் மக்கள் மத்தியில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளார் அர்ஜூன் ரங்கா. இதுமட்டும் அல்லாமல் இந்தக் கிட்-ஐ இணையதளத்தின் வாயிலாகவும் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது இந்நிறுவனம். இதோடு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை முக்கிய வாடிக்கையாளராகக் கருத்தில் கொண்டு இந்த வர்த்தகத்தை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.