Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 5983)

Author Archives: kumariexpress

சென்னையில் மீண்டும் மின்வெட்டு: திங்கட்கிழமை முதல் அமலாகிறது

சென்னை, நவ. 29- தமிகத்தில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலம் முழுவதும் சமமான அளவுக்கு பாரபட்சமில்லாத மின்வெட்டை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. பின்னர் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததையடுத்து மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. சென்னையில் மின்வெட்டு அறவே நீக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் பருவ மழை குறைவு காரணமாக மின்பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மீண்டும் மின்வெட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வரும் ...

Read More »

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி: விசாரணை அறிக்கையில் தகவல்

புதுடெல்லி, நவ. 29- ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கடந்த டிசம்பர் மாதம் புகார் கூறியிருந்தார். ஆனால் அந்த நீதிபதியின் பெயரை அவர் வெளியிடவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி இன்று தனது அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திடம் அளித்தது. அதில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த நீதிபதி, சமீபத்தில் ஓய்வு பெற்ற ஏ.கே.கங்குலி ...

Read More »

இடிந்தகரை குண்டுவெடிப்பை தொடர்ந்து கூடங்குளம், தூத்துக்குடி மின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ராதாபுரம், நவ.29– இடிந்தகரை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கூடங்குளம், தூத்துக்குடி மின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் 6 பேர் பலியானார்கள். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடங்குளம் அணுமின்நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின்நிலையம் மற்றும் வளாகத்தை சுற்றிலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ...

Read More »

சிவாஜி சிலையை அகற்றினால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: சிவாஜி சிலையை அகற்றினால் தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற முயற்சி செய்யப்படுகிறது. அந்த சிலையை அங்கு வைத்தால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுமா என்பதை ஆராய்ந்து இருப்பார்கள். அதன் பிறகே சிலையை வைத்திருப்பார்கள். இந்நிலையில் முன்பு இருந்த அரசு அந்த சிலையை வைத்தது என்பதற்காக அதை அகற்ற முயல்வது கலைத் துறையில் உலக அளவில் ...

Read More »

நாகர்கோவில் நகர பொதுமக்கள் நகை- பணத்தை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு துண்டு பிரசுரம் போலீசார் வினியோகம்

நாகர்கோவில், நவ.29- நாகர்கோவில் நகர பொதுமக்கள் தங்களது நகை மற்றும் பணத்தை திருடர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள போலீசார் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:- போலீசுக்கு புகார் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்லும்போது எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு கால அளவை குறிப்பிட்டு புகார் செய்தால் பூட்டிய வீடுகளில் திருட்டு நடப்பதை கண்காணிக்க வசதியாக இருக்கும். பூட்டிய வீட்டில் விலை உயர்ந்த பொருட்களையோ, பணங்களையோ, தங்க ஆபரணங்களையோ வைக்காமல் பாதுகாப்பு பெட்டகத்தில் ...

Read More »

நெல்லையில் இருந்து கன்னியாகுமரிக்கு மணல் கடத்திய 2 லாரிகளை துரத்தி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் டிரைவர் உள்பட 4 பேர் கைது

கன்னியாகுமரி, நவ.29- நெல்லையில் இருந்து கன்னியாகுமரிக்கு மணல் கடத்திய 2 லாரிகளை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரத்திச் சென்று பிடித்தார். இது தொடர்பாக டிரைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் நெல்லை மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி பகுதிக்கு அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், தங்கராஜா மற்றும் போலீசார் கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் தங்கநாற்கர சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ...

Read More »