Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 5590)

Author Archives: kumariexpress

பேச்சிப்பாறை அருகே வீடுகள் மீது மரம் விழுந்து 2 பெண்கள்–சிறுமி படுகாயம்

குலசேகரம், ஆக. 21– பேச்சிப்பாறை அருகே பொன்னனியார் குளம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சுமார் 150 ஆண்டு பழமையான பெரிய அயினி மரம் இருந்தது. இந்த மரம் பட்டுப்போன நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் காட்சி அளித்ததால் அந்த பகுதி மக்கள் இந்த மரத்தை உடனே வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் இன்று காலையில் அந்த அயினி ...

Read More »

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

நாகர்கோவில், ஆக. 21– கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அவர் இன்று (வியாழக் கிழமை) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு இருந்து திறந்த ஜீப்பில் புறப்பட்டார். முன்னதாக அவர் தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மத்தியில் ஆளும் மோடி அரசு இந்திய மக்களின் எண்ணங்களை மதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்தியா– இலங்கை பிரச்சினையை ...

Read More »

மணல் கடத்தல் கும்பலை விரட்டி சென்ற சப்–இன்ஸ்பெக்டர் கிணற்றில் விழுந்தார்

நாகர்கோவில், ஆக. 20– நாகர்கோவில் அருகே உள்ள ஒரு ஆற்றுப்பகுதியில் நேற்று அதிகாலையில் ஒரு கும்பல் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் தனியாக அந்த மணல் கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக அங்கு சென்றார். சப்–இன்ஸ்பெக்டர் வருவதை பார்த்ததும் மணல் கடத்தல் கும்பல் வாகனத்தில் ஏறி தப்பி ஓடியது. உடனே சப்–இன்ஸ்பெக்டர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த கும்பலை விரட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் ...

Read More »

நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

நாகர்கோவில், ஆக. 20– குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து சாகுபடிக்காக ஷிப்ட் முறையில் சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. சிற்றாறு–1, சிற்றாறு–2, பொய்கை அணையின் நீர் மட்டமும் சரிந்து காணப்படுகிறது. நாகர்கோவில் நகர பகுதி மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் மைனஸ் 17.80 அடியாக உள்ளது. முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவிலில் உள்ள பில்டர் ஹவுசுக்கு ...

Read More »

திருவட்டார் அருகே திருமணம் நிச்சயமான இளம்பெண் மாயம்

குலசேகரம், ஆக. 20– திருவட்டாரை அடுத்த திருவரம்பைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் கவிதா, (வயது 21). கவிதா பிளஸ்–2 வரை படித்துள்ளார். அதன் பிறகு அவர், வீட்டிலேயே தாயாருக்கு உதவியாக இருந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் இவருக்கு மாப்பிள்ளை பார்த்தனர். களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கவிதாவை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். இதற்கான நிச்சயதார்த்தமும் நடந்தது. திருமணத்திற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் கவிதா திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவர் ...

Read More »

தென்தாமரைகுளம் அருகே கைத்துப்பாக்கியுடன் வாலிபர் கைது

தென்தாமரைகுளம், ஆக. 20– தென்தாமரைகுளத்தை அடுத்த எட்டுக்கூட்டு தேரி விளையைச் சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் கைத்துப்பாக்கியுடன் அலைவதாகவும், லைசென்சு இல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்து துப்பாக்கி வாங்கி வந்திருப்பதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் நிஷாந்தை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அவரிடம் துப்பாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தனிப்படை போலீசார் நிஷாந்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. இருந்தும் போலீசார் அவரை லாவகமாக பிடித்து போலீஸ் நிலையம் ...

Read More »