Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 5539)

Author Archives: kumariexpress

தருமபுரியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி; காயம் 30

தருமபுரியில் அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன், சிறுமி உட்பட 7 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று மதியம் தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. ஆஞ்சனேயர் கோயில் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் எதிர்பாராமல் விழுந்தது. இதில் பேருந்தில் இருந்தவர்களில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி, 3 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் ...

Read More »

ஒவ்வொரு மீன்பிடி படகையும் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்: மனோகர் பாரிக்கர்

பனாஜி:”இந்திய ஆட்சி அதிகார வரம்புக்கு உள்பட்ட கடல் பரப்பில் இயக்கப்படுகின்ற ஒவ்வொரு மீன்பிடிப் படகையும் கண்காணிக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது எனபாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.கோவா மாநிலம் பனாஜியில்,இதற்காக ஐ.சி.ஜி. என்ற 4 கப்பல்கள் பாதுகாப்பு ஆய்வுக்காக பயன்படுத்த துவக்கி வைக்கப்பட்டது. கோவா மாநிலம், பனாஜியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பாரிக்கர் பேசுகையில்,ஒவ்வொரு மீன்பிடிப் படகிலும், ஒரு மின்னணு சாதனம் பொருத்தப்படும். அந்த மின்னணு சாதனம், இந்திய விண்வெளியில் உள்ள ...

Read More »

ஆகா ., சபாஷ் ! சரியான போட்டி ! வர்ரீயா., வர்ரீயா., விவாதம் நடத்த

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வருவதால் , இங்கு தேர்தல் ஜூரம் பிடித்துள்ளது. பா.ஜ., ஆம் ஆத்மி கட்சி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் போட்டிக்களத்தில் 3 வதாக உள்ளது. இதிலும் பா.ஜ., தரப்பில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ .பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடியை அறிவித்ததால் மேலும் படு சூடு பிடித்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு பதிலுக்கு , பதில் மல்லுக்கட்டும் தகுதி கொண்ட கிரண்பேடி முதல்வர் இடத்திற்கு சரியான தேர்வு என டில்லி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. கெஜ்ரிவால் ...

Read More »

எனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்: அக்ஷரா ஹாசன்

கமலஹாசனின் இளையமகளான அக்ஷரா ஹாசன் இந்தியில் ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கியுள்ளார். தனுஷ்-அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரியில் படம் வெளிவருகிறது. ஏற்கெனவே, கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அக்ஷராஹாசனை, தன்னுடைய படத்திற்கும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் பால்கி. அவருடைய அழைப்பை ஏற்று சென்ற அக்ஷராஹாசன், தன்னை அவருடைய படத்தில் உதவி இயக்குனராகத்தான் பணிபுரிய அழைத்துள்ளார் என்று நினைத்துள்ளார். ஆனால், பால்கியோ அவரை ‘ஷமிதாப்’ படத்தில் நடிகையாக்கிவிட்டார். இதுகுறித்து அக்ஷரா ...

Read More »

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படப்பிடிப்பு தொடங்கியது

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, கதாநாயகனாக நடித்த ‘நான்’, ‘சலீம்’ ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து, அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘திருடன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார். ‘555’ படத்திற்கு பிறகு சசி இயக்கும் இப்படத்திற்கு ‘பிச்சைக்காரன்’ என்றும் தலைப்பு வைத்திருந்தனர். இதன் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘இந்தியா பாகிஸ்தான்’ படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி பிசியாக இருந்ததால் ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடங்குவதில் ...

Read More »

‘ லேட் கம்மர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘ மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார்

புதுடில்லி: இன்று மதியம் 2 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்தை அடைய முடியாததால் இவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. 3 மணிக்குள் மனுவை வழங்க வேண்டும் என விதிமுறைகள் இருப்பது தெரிந்தும் அவர் செல்ல முடியாததால் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் திரும்பினார். நாளை மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லி சட்டசபை தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ...

Read More »