Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 5499)

Author Archives: kumariexpress

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா பந்தல்கால் நாட்டு விழா நாளை நடக்கிறது

மணவாளக்குறிச்சி, பிப்.2- மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு, பந்தல்கால் நாட்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. பகவதி அம்மன் கோவில் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு கேரள பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபாடு நிறைவேற்றுவது வழக்கம். இதனால் “பெண்களின் சபரிமலை” என்றும் அழைக்கிறார்கள். இந்த கோவிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா வருகிற மார்ச் 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ...

Read More »

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவர் சேர்க்கையை 150-ஆக உயர்த்த நடவடிக்கை புதிய முதல்வர் செந்தில்முருகன் தகவல்

நாகர்கோவில், பிப்.2- கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவர் சேர்க்கையை 150-ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிய முதல்வர் செந்தில்முருகன் கூறினார். புதிய முதல்வர் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு முதல்வராக இருந்த டாக்டர் குணசிங் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரிக்கு புதிய முதல்வராக மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக பணியாற்றிய டாக்டர் செந்தில்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் புதிய முதல்வராக பதவியேற்று கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் ...

Read More »

ஆழ்கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவர்கள் உள்பட 20 பேர் தென்ஆப்பிரிக்காவில் சிறைபிடிப்பு

கொல்லங்கோடு, பிப்.2- ஆழ்கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குமரி மீனவர்கள் உள்பட 20 பேர் தென்ஆப்பிரிக்காவில் சிறைபிடிக்கப்பட்டனர். குமரி மீனவர்கள் குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் கிரேசஸ் (வயது40). இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சூசைய்யன், பவுலோஸ், மரிய செல்டின், தாசன், ரிபால்டோ மற்றும் கேரள மாநிலம் பூவாறு பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 13 பேர் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் முள்ளூர்துறை பகுதியை சேர்ந்த டியோன்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ...

Read More »

மினி டெம்போவில் கடத்தப்பட்ட 1000 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல் 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச்சென்று அதிகாரிகள் மடக்கினர்

நாகர்கோவில், பிப்.2- மினி டெம்போவில் கடத்தப்பட்ட 1000 லிட்டர் ரேஷன் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துரத்திச் சென்றனர் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி மூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, சதீஷ், ரபிநாத் மற்றும் ஊழியர் ராஜாமணி ஆகியோர் நேற்று அதிகாலையில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் அவர்கள் சென்றபோது ஒரு மினி டெம்போ அவர்களைக் கடந்து வேகமாகச் சென்றது. அதன் பின்புறப்பகுதியில் பல கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த ...

Read More »

மார்த்தாண்டத்தில் சாலையில் பழுதடைந்து நின்ற பஸ்

குழித்துறை, பிப்.2- தேங்காப்பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டத்திற்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் மார்த்தாண்டம் சந்திப்பை கடந்து மார்கெட் சாலையில் சென்ற போது திடீரென பழுதடைந்து நின்றது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து பணிமனை ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பழுதடைந்த பஸ்சை வேறொரு பஸ் மூலம் பணிமனைக்கு எடுத்து சென்றனர்.

Read More »

பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மதமாற்ற தடைச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் நாகர்கோவிலில் விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பரபரப்பு பேச்சு

நாகர்கோவில், பிப்.2- பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மதமாற்ற தடைச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார். மாநாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி, குமரி மண்டல இந்து ஒற்றுமை மாநாடு நாகர்கோவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் தாணுமாலயபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் சீனிவாசகண்ணன், டாக்டர் மாறச்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் விசுவ இந்து பரிஷத் ...

Read More »