Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 5398)

Author Archives: kumariexpress

ஆற்றில் பிணமாக மிதந்த நடிகை ஷில்பாவின் காதலர் கேரளாவில் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலர் லிஜினை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா(19). பிளஸ் 2 படித்திருக்கும் அவர் தமிழ், மலையாள படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த 17ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. ஷில்பாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி ஷில்பா திருவனந்தபுரம் ...

Read More »

ஜெ. விடுதலையை எதிர்க்கும் அப்பீல் மனுவை விசாரிக்கும் இரு நீதிபதிகள் பெஞ்ச் அறிவிப்பு!

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை இரு நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை ...

Read More »

நாகர்கோவிலில் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி திரிந்த 2 மாணவர்கள் மீட்பு மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய போலீசார்

நாகர்கோவில், ஜூலை 23– நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலை எப்போதும் மக்கள் நடமாட்டத்தால் பரபரப்பாக காணப்படும். இன்று பகல் 12.15 மணி அளவில் இந்த பகுதியில் 2 மாணவர்கள் பள்ளி சீருடையுடன் சுற்றி திரிந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் மாணவர்கள் சாலையில் சுற்றி திரிவதை பார்த்ததும் அவர்களை பிடித்து விசாரித்தார். அவர்கள் நாகர்கோவிலில் உள்ள வெவ்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் என்பதும், வீட்டு பாடத்தை ஒழுங்காக செய்யாததால் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர்கள் கண்டிப்பார்கள் என்பதால் ...

Read More »

தெங்கம்புதூர் பகுதியில் 25–ந்தேதி மின் தடை

நாகர்கோவில், ஜூலை 23– தெங்கம்புதூர் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (25–ந் தேதி) நடைபெறுகிறது. இதனால் 25–ந் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதனால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டி பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தா மொழி, தர்மபுரம், பழவிளை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

Read More »

நாகர்கோவில் நகராட்சி கவுன்சிலர் கொலைக்கு பின்னணி காரணம்: தனிப்படை விசாரணை தகவல்கள்

நாகர்கோவில், ஜூலை 23– ஆசாரிபள்ளம் ஆலன் தெருவைச் சேர்ந்தவர் ஜான் ராஜாசிங் (வயது 38). நாகர்கோவில் நகரசபை தி.மு.க. கவுன்சிலரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆசாரிபள்ளம் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்தனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதன் விவரம்:– கவுன்சிலர் ஜான் ராஜாசிங் பதவிக்கு வருவதற்கு முன்பு இவருடன் பலர் நட்பாக இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜெயசிங். ...

Read More »

சாதாரணமாக பெய்த மழைக்கே மெட்ரோ ரெயில் நிலைய கூரைகள் ஒழுகின

சென்னை, ஜூலை 23– சென்னையில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே கடந்த 29–ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. மற்ற நாட்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மிகவும் நவீன வசதிகளுடன் அதிக பொருட் செலவில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் சாதாரண மழைக்கு கூட தாங்காமல் ஒழுகி வருகின்றன. கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் பகுதிகளில் நேற்று 3 செ.மீ அளவுக்குதான் மழை பெய்தது. ஆனால் இந்த மழைக்கே மெட்ரோ ரெயில் ...

Read More »