Templates by BIGtheme NET
Home » Author Archives: kumariexpress (page 5257)

Author Archives: kumariexpress

போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறி கட்டிட தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்குதல் ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேர் கைது

மேலகிருஷ்ணன்புதூர், மார்ச்.17- மேலகிருஷ்ணன்புதூர் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறி கட்டிட தொழிலாளியை காரில் கடத்தி சென்று சரமாரியாக தாக்கிய ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரில் கடத்தல் மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள விநாயகர்காலனியை சேர்ந்தவர் குமார் (வயது 38). கட்டிட தொழிலாளி. அவரது மனைவி பால்மணி. குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், குமார் தனது மனைவியை அடித்து உதைப்பதாக கூறப்படுகிறது. இந்த ...

Read More »

‘குடிகாரர்களை காசநோய் எளிதில் தொற்றிக்கொள்ளும்’ மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் பேச்சு

நாகர்கோவில், மார்ச்.17- குடிகாரர்களை காசநோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் என்று, மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் கூறினார். விழிப்புணர்வு பிரசார பணிகள் ஆண்டுதோறும் மார்ச் 24-ந் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு குமரி மாவட்ட காசநோய் மையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றன. அதன் அடிப்படையில் நேற்று ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையம், வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம் மற்றும் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையங்களில் ...

Read More »

வெள்ளறடை குருசுமலை திருப்பயண விழா நாளை தொடங்குகிறது கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி பங்கேற்பு

நாகர்கோவில், மார்ச்.17- வெள்ளறடை குருசுமலை திருப்பயண விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொள்கிறார். குருசுமலை தமிழகத்தின் குமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பத்துகாணி மற்றும் கேரளா எல்லையில் அமைந்துள்ள வெள்ளறடை பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கூனிச்சி, கொண்டைகட்டி என்ற மலைப்பகுதிகளே வெள்ளறடை குருசுமலை என்று அழைக்கப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குருசுமலை தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட நிர்வாக பொறுப்பில் ...

Read More »

வாக்காளர், ஆதார் அட்டைகளுடன் பாஸ்போர்ட்டு விண்ணப்பித்தலுக்கும் இ-சேவை மைய பயன்பாடு விரிவாக்கம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்

நாகர்கோவில், மார்ச்.17- வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம், ஆதார் அட்டைகளை பெறுதல் மற்றும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகளுக்காக இ-சேவை மைய பயன்பாடு விரிவுபடுத்தப்பட இருப்பதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார். கலெக்டர் ஆய்வு குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் 4 தாலுகா அலுவலகங்களிலும் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் அகஸ்தீஸ்வரம் மற்றும் கல்குளம் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, இ-சேவை மூலம் சான்றிதழ் ...

Read More »

தக்கலை அருகே கண்டக்டர் மாயம்

தக்கலை, மார்ச். 16– தக்கலை அருகே மருதூர் குறிச்சியை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 64). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதால் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11–ந் தேதி காட்டாத்துறை சென்று வருவதாக கூறி சென்ற லூக்காஸ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி பேபி கணவர் மாயமானது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ராஜமார்த்தாண்டன் வழக்கு ...

Read More »

கன்னியாகுமரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தக்கலை, மார்ச். 16– நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 40). பெயிண்ட்டிங் தொழிலாளி. இவர் திக்கணங்கோடு சைபன் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் முத்துலெட்சுமி. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. திருநாவுக்கரசும் அவரது நண்பர் ஒருவரும் இன்று காலை திக்கணங்கோடு சந்திப்பில் ஒரு கடைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று இருந்தனர். அந்த கடையின் 2–வது மாடியில் அவர்கள் பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தனர். அப்போது திருநாவுக்கரசு ...

Read More »