Templates by BIGtheme NET

Author Archives: kumariexpress

ஆசாரிபள்ளத்தில் நர்சிடம் 11 பவுன் நகை பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர்

நாகர்கோவில், நவ. 16– நாகர்கோவில் அருகே பள்ளவிளையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி விஜயஷீலா (வயது 40). ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் விஜயஷீலா கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்து விஜயஷீலா ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நாகர்கோவில் நகர் முழுவதும் ...

Read More »

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு: தெண்டுல்கர் கண்ணீருடன் விடைபெற்றார்

மும்பை, நவ. 16– கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் ஆடி வந்த அவர் தனது 200–வது டெஸ்டோடு ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார். அவரது 200–வது மற்றும் கடைசி போட்டி சொந்த மைதானமான மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. தனது கடைசி டெஸ்டில் அவர் மிகவும் அபாரமாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 118 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்தார். இன்றைய ஆட்டத்தில் ...

Read More »

கன்னியாகுமரியில் காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை கதவை உடைத்து மர்ம மனிதர்கள் துணிகரம்

கன்னியாகுமரி,நவ.16- கன்னியாகுமரியில் காண்டிராக்டர் வீட்டு கதவை உடைத்து மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளனர். காண்டிராக்டர் கன்னியாகுமரி பில்லர் ஆஸ்பத்திரி அருகே வசிப்பவர் சண்முகம். காண்டிராக்டர். இவரது மனைவி கீதா (வயது 48). இவர்களின் மகள் படிப்பு சம்பந்தமாக சண்முகமும், கீதாவும் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றனர். இவர்கள் வீட்டில் பாதுகாப்புக்காக ஒரு நாய் வளர்த்து வருகின்றனர். இவர்கள் சென்னைக்கு சென்று விட்டதால் பெரியாவிளையை சேர்ந்த ராஜப்பன் என்ற காவலாளி இந்த நாய்க்கு உணவு ...

Read More »

மார்த்தாண்டம் பகுதியில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 27-ந் தேதி ஏலம் விடப்படும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ழித்துறை, நவ.16- மார்த்தாண்டம் பகுதியில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 27-ந் தேதி நாகர் கோவிலில் ஏலம் விடப் படும் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித் தார். போலீஸ் நிலையம் ஆய்வு மார்த்தாண்டம் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில், மது விலக்கு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர், வழக்குகளின் நிலவரம் குறித்தும், இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:- மார்த்தாண்டம் மது விலக்கு போலீஸ் நிலையம் பழமை யான ஓட்டு ...

Read More »

திருமணம் செய்ய வலியுறுத்தி காதலன் வீட்டு முன்பு போராட்டம்: வாலிபர் தலைமறைவானதால் இளம்பெண்ணை தாயாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்

மேல்புறம், நவ.16- மார்த்தாண்டம் அருகே காதலன் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய பெண்ணை போலீசார் தாயாருடன் அனுப்பி வைத்தனர். வாலிபருடன் காதல் அருமனை அருகே உள்ள கும்பகோடு பகுதியை சேர்ந்தவர் சுஜி (வயது19). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், மார்த்தாண்டம் அருகே கடம்பகோடு பகுதியை சேர்ந்த அஜின்ராஜ் (21) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. அஜின்ராஜ் பாலிடெக்னிக் படித்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அஜின்ராஜ், சுஜியை அழைத்துக் கொண்டு திருவட்டாரில் ...

Read More »

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் போலீஸ் நிலையங்களில் நியமனம்

நாகர்கோவில், நவ.16- பல்வேறு சம்பவங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 போலீசார் வெளி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையங்களுக்கு நியமனம் பணியில் இருக்கும்போது ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டது, புகார் கொடுத்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, சோதனைச்சாவடிகளில் திருட்டு மணல் லாரிகளை தடுத்து பிடிக்கத்தவறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.