Templates by BIGtheme NET

Author Archives: kumariexpress

அஞ்சுகிராமம் அருகே 9-ம் வகுப்பு மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

அஞ்சுகிராமம், நவ.22- அஞ்சுகிராமம் அருகே 9-ம் வகுப்பு மாணவியின் திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மாணவிக்கு திருமணம் அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மருங்கூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி வெள்ளமடத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளார். அதன்பிறகு சில நாட்கள் ஆகியும் காப்பகத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காப்பக நிர்வாகி இதுபற்றி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது 9-ம் வகுப்பு ...

Read More »

நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட 2 காப்பகங்களில் இருந்து 24 மாணவிகள் மீட்பு அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்

நாகர்கோவில், நவ.22- நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட இரண்டு காப்பகங்களில் இருந்து 24 மாணவிகள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். திடீர் சோதனை நாகர்கோவில் நகர பகுதியில் அரசு அனுமதியின்றியும், பதிவு செய்யப்படாமலும் இரண்டு குழந்தைகள் காப்பகங்கள் வீடுகளில் செயல்பட்டு வருவதாக குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் கவனத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட காப்பகங்களில் சோதனை நடத்தி, அங்குள்ள மாணவிகளை மீட்குமாறு சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி உமாபதி தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபதி, அமல்ராஜ், ராஜேஸ்குமார் ...

Read More »

குமரி மாவட்டத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு கள்ள நோட்டை ‘ஜெராக்ஸ்’ எடுத்து புழக்கத்தில் விட்டனர்

நாகர்கோவில், நவ.22- குமரி மாவட்டத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டை ரூ.20 ஆயிரத்துக்கு ‘ஜெராக்ஸ்‘ எடுத்து புழக்கத்தில் விட்ட திடுக்கிடும் தகவலை கைதானவர்கள்தெரிவித்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு :- பழக்கடை நாகர்கோவில் கோணம் தொல்லவிளையைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இவர் புன்னைநகர் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பார்வதிபுரம் பிராமணர் தெருவைச் சேர்ந்த சுஜின் (25), தாழக்குடி சந்தைவிளையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (24) ஆகிய 2 பேரும் சென்றனர். அவர்கள் ஒரு 500 ரூபாயை சுரேஷிடம் கொடுத்து பழம் ...

Read More »

பத்மநாபபுரம் நகரசபை கூட்டத்தில் புலியூர்குறிச்சி மீன்சந்தையை மாற்றக்கோரி வாக்குவாதம்

திருவிதாங்கோடு, நவ.22- பத்மநாபபுரம் நகரசபை கூட்டத்தில் மீன்சந்தையை மாற்றுவது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. நகரசபை கூட்டம் பத்மநாபபுரம் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவி சத்யாதேவி தலைமை தாங்கினார். ஆணையாளர் மேத்யூ ஜோசப் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பற்றிய விவரம் வருமாறு:- கவுன்சிலர் ஹரிகுமார்¢:-1992-ம் ஆண்டு முதல் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு தற்போது பென்ஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தலைவர்:-இது குறித்த விவரங்களை தாருங்கள், நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலர் வனஜா:- ...

Read More »

10 ரூபாய்க்கு வேட்டி-சேலை: ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு

ராஞ்சி, நவ. 21- ஜார்க்கண்ட் மாநிலத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு 10 ரூபாய்க்கு வேட்டி, சேலை வழங்கப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். மேற்கு சிங்பம் மாவட்டம் சாய்பாசா நகரில் நடந்த அரசு விழாவில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். விழாவில் முதல்வர் சோரன் மேலும் பேசியதாவது:- பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 10 ரூபாய் விலையில் வேட்டி, சேலைகள் விற்பனை செய்யப்படும். இதேபோல் சமையல் எண்ணெயும் சலுகை விலையில் வழங்கப்படும். பழங்குடியின மக்கள் வங்கிக் கடன்களை ...

Read More »

காலத்துக்கு ஏற்ப விற்பனையிலும் புதுமை: தேங்காய், முருங்கைக்காயும் எடைக்கு விற்கும் காலம் வந்தாச்சு

கன்னியாகுமரி, நவ. 21- தேங்காய் விலை எவ்வளவு? என்று கேட்ட நிலை மாறி தேங்காய் கிலோ என்ன விலைங்க… என்று கேட்டு வாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை… தமிழகத்தில் தேங்காய் அதிகம் விளைச்சலாவது பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் தான். இங்கிருந்து தான் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேங்காய் கொண்டு வரப்படுகிறது. சிறியகாய், நடுத்தரகாய், பெரிய காய் என்று 3 விதமாக தேங்காயை தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்வார்கள். கடைகளில் ஒரு தேங்காய் ரூ. 10 முதல் ரூ. 20 வரை ...

Read More »