Templates by BIGtheme NET

Author Archives: kumariexpress

RJD-to-hold-antidemonetidation-rallies-across-Bihar

பீகாரில் பண மதிப்பிழப்பு தொடர்பான பேரணிகள் நடத்தப்படும்: லாலு பிரசாத் யாதவ்

பாட்னா: பிரதமர் மோடி அறிவித்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது குறித்து நவம்பர் 8-ம் தேதி பீகாரில் பேரணிகள் நடத்தப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். ஆனால் அவரது நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது. பீகார் ...

Read More »
Group-of-245-Brazilian-thrillseekers-jump-from-bridge

பிரேசலில் 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை – வைரலாகும் வீடியோ

பிரேசிலில் 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரேசலில் 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை – வைரலாகும் வீடியோ பிரேசிலியா: பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் சாகச விரும்பிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். 245 பேர் இணைந்து பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். பாலத்தில் ...

Read More »
What-are-the-measures-taken-for-the-benefit-of-farmers

விவசாயிகள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன?

புதுடெல்லி, தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் விவசாயிகள் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அதில், ‘ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், அரிசி, சிறு தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ...

Read More »
Sukesh-Chandrasekhar-to-leave-free-7-Delhi-police-sacked

சுகேஷ் சந்திரசேகரை சுதந்திரமாக நடமாட விட்ட 7 டெல்லி போலீசார் பணி நீக்கம்; ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு

புதுடெல்லி, கோர்ட்டு விசாரணைக்காக இந்த மாதம் மும்பை, கோவை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இவர் டெல்லி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். பெங்களூருவில் அவர் ஒரு வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்யவும், வர்த்தக பேரத்தில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டதாக டெல்லி போலீஸ் கமி‌ஷனரிடம் வருமான வரித்துறை அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, டெல்லி போலீசார் 7 பேர், கடந்த 19–ந் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் அவர்கள் முறைகேடாக நடந்தது நிரூபணம் ஆகியுள்ளது. இதனால், 7 பேரும் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். ...

Read More »
Indonesia-seeks-answer-to-why-US-blocked-military-chiefs

ராணுவ தளபதிக்கு அனுமதி மறுப்பு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் இந்தோனேசியா

ஜகர்தா: அமெரிக்காவில் இன்றும் நாளையும் (23,24-ம் தேதி) அந்நாட்டின் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு இந்தோனேசியா நாட்டின் ராணுவ தளபதி கட்டாட் நுர்மண்ட்யோ-வுக்கு அமெரிக்க முப்படைகளின் தலைவர் ஜோசப் டன்போர்ட் அழைப்பு விடுத்திருந்தார். வாஷிங்டன் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜகர்தா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற முயன்றபோது, அவரை அமெரிக்க எல்லையில் தரையிறங்க அனுமதிக்க முடியாது என அமெரிக்க எல்லை பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக தகவல் ...

Read More »
US-Secretary-of-State-Tillerson-in-surprise-visit-to-Afghan

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி திடீர் வருகை

காபுல்: பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் வந்தடைந்தார். காபுல் நகரின் தெற்கே உள்ள பக்ராம் விமானப்படை தளத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசிய ரெக்ஸ் டில்லர்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி நிலவவும், தீவிரவாதத்தை வேரறுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டார். இங்குள்ள தலிபான் உள்ளிட்ட தீவிரவாதிகள் ஆயுத பலத்தால் ...

Read More »